Published:Updated:

கணவர் ஆசிட் ஊற்றவில்லை, கஞ்சிதான் ஊற்றினார்: மனைவியின் சென்டிமெண்ட்

கணவர் ஆசிட் ஊற்றவில்லை, கஞ்சிதான் ஊற்றினார்: மனைவியின் சென்டிமெண்ட்
கணவர் ஆசிட் ஊற்றவில்லை, கஞ்சிதான் ஊற்றினார்: மனைவியின் சென்டிமெண்ட்

நாமக்கல்: குடும்பத் தகராறில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன் சிறையில் இருக்கும் நிலையில், கணவர் என் மீது ஆசிட் வீச வில்லை, கஞ்சி தான் ஊற்றினார் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவி தற்போது கூறி வருகிறார். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் சென்டிமெண்ட் இதுதானோ!

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள குத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமாருக்கும் (35),  நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் லதாவுக்கும் ( 27) 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

சசிக்குமார் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். லதா, நாமக்கல்லில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். சசிக்குமார் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் குடித்து வந்ததோடு, மனைவி லதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் அவரை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் லதாவை சசிக்குமார் அடித்துள்ளார். இதனால், கணவரோடு கோபித்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் நாமக்கல் நடராஜபுரத்தில் உள்ள தன் தந்தை வீட்டிற்கு வந்து விட்டார் லதா.

இதனிடையே, கடந்த 13ஆம் தேதி மனைவியை பார்ப்பதற்காக வந்த சசிக்குமார், அப்போதும் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார், பாத்ரூமில் இருந்த ஆசிட்டை எடுத்து மனைவி லதா மீது ஊற்றி விட்டு தப்பி விட்டார்.

##~~##
லதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உடனடியாக நடராஜபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் லதா சேர்க்கப்பட்டார். 
இது குறித்து லதா, கணவன் மீது நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சசிக்குமார் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா, ‘‘கணவர் என் மீது ஆசிட் வீச வில்லை. கஞ்சி தான் ஊற்றினார்’’ என்று கூறி வருகிறார்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்.
வீ.கே.ரமேஷ்