சதய விழாவுக்காகப் பெரிய கோயில் வடிவிலான ரதத்தை தத்தரூபமாகச் செய்து வழங்கிய இணை கலை இயக்குநர் | For Thanjavur temple festival, an art director present an model of temple

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (12/10/2018)

கடைசி தொடர்பு:22:20 (12/10/2018)

சதய விழாவுக்காகப் பெரிய கோயில் வடிவிலான ரதத்தை தத்தரூபமாகச் செய்து வழங்கிய இணை கலை இயக்குநர்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழாவின்போது நடைபெறும் திருமுறை திருவீதியுலாவுக்காக, சினிமாவில் செட் வடிவமைப்பாளாராக இருப்பவர் 10 லட்சம் ரூபாய் செலவில் பைபரலால் செய்யபட்ட பெரியகோயில் வடிவிலான ரதத்தைச் செய்து உபயமாக வழங்கியுள்ளார். 

பெரிய கோயில்

தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினத்தை சதய விழாவாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சதய விழா வரும் 19  மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சதய விழாவின் இரண்டாம் நாள் காலையில் முக்கிய நிகழ்வான ஓதுவார்களின் திருமுறை பண், மங்கல இசையுடன் நான்கு ராஜ வீதிகளில் திருமுறை திருவீதியுலா நடைபெறும். அப்போது ஓதுவார்கள் பெரிய கோயில் வடிவிலான ரதத்தில் உட்கார்ந்துகொண்டு மங்கள இசை முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாடிக்கொண்டு வருவார்கள். இதை மக்கள் அனைவரும் கூடி நின்று பரவசத்துடன் பார்ப்பார்கள். இதற்கான ரதம் கடந்த சில ஆண்டுகளாகச் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை அறிந்து தஞ்சாவூர் அருகே உள்ள வல்லத்தைச் சேர்ந்த பக்தர் ராமலிங்கம் என்பவர் சதய விழாவுக்காக பைபரில் 18 அடி  நீளமும், 12 அடி அகலமும் கொண்ட தத்தரூபமாகப் பெரிய கோயில் வடிவமைப்புள்ள புதிய ரதத்தைச் செய்து உபயமாகக் கோயிலுக்கு வழங்கினார். இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாயாகும்.

கோயில்

பக்தர் ராமலிங்கம் சினிமாவில் இணை செட் வடிவமைப்பாளராக 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளர். அத்துடன் கடந்த 2010-ம் ஆண்டு பெரிய கோயிலின் 1,000 ஆண்டு விழாவின்போது நடைபெற்ற கருத்தரங்கத்துக்கான மேடையை பெரிய கோயில் வடிவிலேயே உருவாக்கியவர். இந்த விழாவில் கலந்துகொண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி பெரிய கோயில் போன்ற மேடை அமைத்ததை ரசித்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கோயில் நிர்வாகத்திடம் ராமலிங்கம் வழங்கிய சிறிய அளவிலான பெரிய கோயில் ரதத்தைக் கோயில் வடிவமைப்பை அப்படியே பிரதிபலித்தது. மாதிரி பெரிய கோயில் வடிவிலான இந்த ரதம் நந்திக்கு எதிரே வைக்கப்பட்டது. இதைப் பக்தர்கள் அனைவரும் ரசித்துப் பார்த்தனர். மேலும் ரதத்தின் முன்பு நின்று செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close