வெளியிடப்பட்ட நேரம்: 05:12 (15/10/2018)

கடைசி தொடர்பு:07:05 (15/10/2018)

இன்று முதல், டாடாவின் ஹேரியர் எஸ்யூவியை புக் செய்யலாம்! #BornOfPedigree

Cryogenic ராக்கெட் இன்ஜினை நினைவுகூரும் விதமாக, ஹேரியரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜினுக்கு Kryotec எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 

ஹேரியர்.... இந்திய ஆட்டோமொபைல் துறையே ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பிரிமியம் எஸ்யூவியின் புக்கிங், இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது. டாடா மோட்டார்ஸ் டீலர்களில் 30,000 ரூபாய் செலுத்தி, இந்த எஸ்யூவியை புக் செய்யலாம் எனத் தெரிகிறது. புக்கிங் இப்போதே துவங்கினாலும், புத்தாண்டு பரிசாகவே ஹேரியர் இந்தியாவில் டயர் பதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும் மக்களே! இது 2 மாடல்களில் வெளிவரலாம். 

 

இந்தப் பிரிமியம் எஸ்யூவியின் விலை என்ன?

 

ஹேரியர்

 

தோராயமாக இந்த எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள், 13.5 - 18 லட்ச ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, ஹேரியரின் ஆன்ரோடு விலைகள், 16 - 21 லட்ச ரூபாய் என்றளவில் இருக்கும் என நம்பலாம். க்ரெட்டாவுக்குப் போட்டியாக 5 சீட்டர் மாடலையும், காம்பஸுக்குப் போட்டியாக 7 சீட்டர் மாடலையும் பொசிஷன் செய்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். ஒரே இன்ஜின்தான் என்றாலும், பவர்/கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உண்டு.

 

டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் - சேஸியில் என்ன ஸ்பெஷல்?

 

Harrier

 

Cryogenic ராக்கெட் இன்ஜினை நினைவுகூரும் விதமாக, ஹேரியரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜினுக்கு Kryotec எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருப்பது பெரிய ப்ளஸ். இதில் இருக்கும் இன்ஜின், காம்பஸில் இருப்பதுதான்; அதேபோல, 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், டூஸானில் இருப்பதுதான். உள்ளூர் காரில் சர்வதேசப் பாகங்கள்!

 

Harrier

 

eVGT, டிரைவிங் மோடுகள், ESP-க்கான Terrain Response மோடுகள் என டெக்னிக்கலாக அசத்தும் இந்த டர்போ டீசல் இன்ஜின், 5 சீட்டர் மாடலில் 140bhp பவரை வெளிப்படுத்தும்; இதுவே 7 சீட்டர் மாடல் என்றால், 170bhp பவர் கிடைக்கும். JLR-ன் D8 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் OMEGA ப்ளாட்ஃபார்மில்தான், ஹேரியரைத் தயாரித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். 2WD/4WD ஆப்ஷனும் இருக்கலாம்.

 

காரின் கேபின் மற்றும் கட்டுமானத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

 

Harrier

 

புஷ் பட்டன் ஸ்டார்ட், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், 17 இன்ச் அலாய் வீல்கள், LED ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ், இண்டிகேட்டர்களுடன் கூடிய எலெக்ட்ரிக் ரியர் வியூ மிரர்கள், ப்ரொஜெக்டர் பனி விளக்குகள், பின்பக்க வைப்பர் மற்றும் ஸ்பாய்லர், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி என அசத்துகிறது ஹேரியரின் கேபின். இது கிக்ஸ் மற்றும் கியா SP எஸ்யூவியுடனும் போட்டிபோடும் என்பதாலேயே வசதிகளில் தாராளம் தெரிகிறது.

 

ஹேரியர்

 

லேண்ட்ரோவரில் இருக்கும் அதே ஃப்ளோர் பேன், ஸ்டீயரிங் அமைப்பு, இண்டிபென்டண்ட் சஸ்பென்ஷன் செட்-அப், Auxiliary Isolation பாடி பேனல்கள், Crumple Zones ஆகியவைதான், ஹேரியரின் மோனோகாக் கட்டுமானத்திலும் இடம்பெற்றிருக்கும். என்றாலும் எஸ்யூவியின் விலையைக் கட்டுக்குள் வைக்க, கட்டுமானத்தில் அலுமினியத்துக்குப் பதிலாக High Strength Steel பயன்படுத்தப்படலாம். Impact Design 2.0 கோட்பாடுகளின்படி இது வடிவமைக்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க