வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (15/10/2018)

கடைசி தொடர்பு:14:57 (15/10/2018)

கார் ரேஸில் பங்கேற்றாரா?‍ - வைரல் புகைப்படத்துக்கு அஜித் தரப்பு விளக்கம்

சமீபத்தில் JK Euro National championship ரேஸ் கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே டிராக்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அஜித் கலந்துகொண்டார் என்று சொல்லி பிட் ஸ்டாப்பில் அவர் நிற்பதுபோல புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவுகின்றன. ஆனால், உண்மையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு அஜித் வரவேயில்லை. இதுபற்றி டிராக் மேனேஜர் முதல் போட்டியில் வெற்றிபெற்ற ரேஸர் கார்த்திக் தரணி வரை எல்லோரிடமும் விசாரித்தோம். கடந்த வாரம் அஜித் டிராக்குக்கு வரவில்லை என்றும் அந்தப் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்றார்கள்.

அஜித்

மேலும், இந்தப் படத்தில் அவர் உடன் இருப்பவர்கள் ஃபோக்ஸ்வாகன் ஏமியோ கப் ஜெர்ஸி அணிந்திருக்கிறார்கள். ஏமியோ கப் கடைசிப் போட்டி கடந்த 8-ம் தேதி புத் இன்டர்நேஷனல் சர்க்யுட்டில் நடைபெற்றது. இதோடு அடுத்த ஜூன் மாதம்தான் ஏமியோ கப் போட்டிகள் நடைபெறும். அஜித்தின் நெருங்கிய ரசிகர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பேசினோம். `` அவர் தற்போது பல படங்களில் நடித்துவருவதால் ரேஸ் டிராக் பக்கம் செல்வது குறைந்துவிட்டது. இன்னும் அவருக்கு ரேஸ் ஆர்வம் இருக்கிறது. ஏமியோ கப்,  JK FMSCI National championship போன்ற கார் ரேஸ் முடிவுகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்றார்கள்.