வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (15/10/2018)

`இதுதான் புதிய சான்ட்ரோவின் விலையா?’ - வைரலாகும் தகவல் #Santro

ஹூண்டாய் புதிய சான்ட்ரோ வரும் 23-ம் தேதி விற்பனைக்கு வரும் நிலையில் இதன் முன்பதிவுகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. விலை தெரியாமல் முன்பதிவு பண்ணலாமா எனக் குழப்பம் இருக்கும் வேளையில், தற்போது சான்ட்ரோவின் விலைப்பட்டியல் இணையதளத்தில் வெளியாகி ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே வைரலாகியுள்ளது.

சான்ட்ரோ விலை

படம் : gaadiwaadi.com

டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா என ஐந்து வேரியன்டுகளாக வருகிறது சான்ட்ரோ. இதில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வருகிறது. இது 69bhp பவரையும், 99Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மிட் வேரியன்ட்டான மேக்னாவிலும், அதற்கு அடுத்த வேரியன்டான ஸ்போர்ட்ஸிலும் மட்டும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வருகின்றன. இதே வேரியன்டுகளில் பெட்ரோலுக்குப் பதிலாக 59bhp பவர் மற்றும் 84Nm டார்க் உருவாக்கக்கூடிய CNG இன்ஜின் வருகிறது. 

புது சான்ட்ரோவின் விலை ரூபாய் 3.87 லட்சத்தில் ஆரம்பித்து 5.29 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் இதில், டிரைவருக்கான காற்றுப்பை, ABS, EBD ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரியர் ஏசி வென்ட், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஸ்டியரிங் வீல் கன்ட்ரோல் போன்று விலை உயர்ந்த கார்களில் வரும் பல வசதிகள் சான்ட்ரோவில் வருகின்றன. அலாய் வீல் மட்டும் எந்த வேரியன்டிலும் இல்லை.