வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (16/10/2018)

கடைசி தொடர்பு:07:20 (16/10/2018)

ஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ!

ரியல்மீ

கடந்த 10 -ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஃபிளிப்கார்ட் நிறுவனம் நடத்திய பிக் பில்லியன் டே சேலில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை படைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ரியல்மீ நிறுவனம். ஐந்து மாதங்களுக்கு முன்னால் ஒப்போவின் துணை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ரியல்மீ சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்த சேலில் 1,10,000 Realme C1 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது மட்டுமின்றி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 2 ஸ்மார்ட்போனும் நாற்பது நாள்களில் பத்து லட்சம் விற்பனையாகியிருக்கிறது.

``பிக் பில்லியன் டே சேலில் ரியல்மீயின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. வேகமாக விற்பனையான மொபைல்களில் ரியல்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும் இருக்கின்றன. தொடங்கப்பட்டு ஐந்து மாதங்களேயான இந்த நிறுவனம் நிச்சயமாகச் சாதனை படைத்திருக்கிறது" என பிளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஷியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களே பட்ஜெட் செக்மென்டில் பலரும் விரும்பி வாங்கும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த முறையும் விற்பனையில் அதுவே முதலிடம் பிடித்திருக்கிறது. அதற்கடுத்ததாக இரண்டாவது இடத்தை ரியல்மீ பிடித்திருக்கிறது.