வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (16/10/2018)

கடைசி தொடர்பு:16:22 (16/10/2018)

ஹூண்டாய் சான்ட்ரோ... கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

1998-ம் ஆண்டு முதன்முதலாக சான்ட்ரோ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. 20 ஆண்டுகள் கழித்து ஆல் நியூ சான்ட்ரோவை செம ஸ்டைலிஷாக வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹூண்டாய்.

ஹூண்டாய் சான்ட்ரோ... கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

`5 லட்சம் ரூபாய்க்குள்ள சிம்பிளா, ஸ்டைலா, மைலேஜ் அதிகமா, காருக்குள்ள இடம் ஜாஸ்தியா இருக்க மாதிரி என்ன கார் வாங்கலாம்’ எனக் கேட்டவர்கள் எல்லோரும் ஹூண்டாய் சான்ட்ரோவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். 1998-ம் ஆண்டு முதன்முதலாக சான்ட்ரோ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. 20 ஆண்டுகள் கழித்து ஆல் நியூ சான்ட்ரோவை செம ஸ்டைலிஷாக வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹூண்டாய். புதிய சான்ட்ரோவில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் மட்டும் இங்கே!

ஹூண்டாய் சான்ட்ரோ கார்

1. அகலமும் அதிகம்... உயரமும் அதிகம்!

மாருதி ஸென், மாருதி 800கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் டால்பாய் டிஸைனோடு வந்து மார்க்கெட்டை அதிரவைத்தது முதல் தலைமுறை சான்ட்ரோ. புதிய சான்ட்ரோவும் டால் பாய் டிஸைன்தான். ஆனால், பழைய சான்ட்ரோவின் சாயல் துளிகூட இல்லாமல் செம ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரெனோ க்விட், டட்ஸன் கோ, டாடா டியாகோ ஆகிய கார்களுடன் போட்டிபோடுகிறது புதிய சான்ட்ரோ. போட்டியாளர்களைவிட நீளத்தில் (3610மிமீ) குறைவான கார் சான்ட்ரோ. ஆனால், மினி ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் அதிக உயரமான (1645மிமீ) கார் சான்ட்ரோதான். அகலமும் அதிகம். ஆனால், டாடா டியாகோவைவிட (1560மிமீ) குறைவு. கிராண்ட் ஐ10 தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் சான்ட்ரோவும் தயாரிக்கப்பட இருக்கிறது என்பதால் அந்த காரில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் இதிலும் இருக்கும்.

2. நீளும் சிறப்பம்சங்கள்!

ஹூண்டாயின் சிறப்பே சிறப்பம்சங்களில் திணறடிப்பதுதான். போட்டியாளர்கள் யாரிடமும் இல்லாத சிறப்பம்சங்களைக் கொண்டுவந்து மார்க்கெட்டைப் பிடிப்பதுதான் அவர்கள் ஸ்ட்ராட்டஜி. அதனால், புதிய சான்ட்ரோவிலும் சிறப்பம்சங்கள் அதிகம். 7 இன்ச் டச் ஸ்கிரீனை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ப்ளே வசதிகள் வசதிகள் இதில் உண்டு. ரியர் ஏஸி வென்ட், ரியர் கேமெரா வசதிகளும் உண்டு. அதேபோல் ஸ்டீயரிங்கிலேயே ஆடியோ கன்ட்ரோல் வசதி, பவர் ஸ்டீயரிங், யுஎஸ்பி போர்ட் ஆகியவை விலை குறைவான வேரியன்ட்களிலேயே கிடைக்கும். ஆனால், ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் சான்ட்ரோவில் இல்லை.

கார்

3. பாதுகாப்பு போதுமா?

டாடா டியாகோ, டட்ஸன் கோ ஆகிய கார்களில் பாதுகாப்புக்காக இரண்டு காற்றுப்பைகள் உள்ளன. ஆனால், சான்ட்ரோவில் டிரைவருக்கு மட்டுமே காற்றுப்பை உள்ளது. ஆனால், ஏபிஎஸ் மற்றும் மற்றும் எலெக்ட்ராக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் வசதிகள் உள்ளன. 

4. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்!

புதிய சான்ட்ரோவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் உண்டு. ஆனால், இதன் விலை சென்னையில் 6 லட்சம் ரூபாயை நெருங்கும் என எதிர்பார்க்கலாம். 1086சிசி திறன்கொண்ட, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 69bhp சக்தியை வெளிப்படுத்தும். சான்ட்ரோவில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. அராய் சான்றிதழ்படி லிட்டருக்கு 20.3லிட்டர் மைலேஜ் தரும் என்கிறது ஹூண்டாய். ஆனால், ஆன் ரோடைப் பொறுத்தவரை சான்ட்ரோவின் எடை குறைவு என்பதால் லிட்டருக்கு 15 கிமீட்டருக்கு மேல் மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

5. விலை?

புதிய சான்ட்ரோவின் ஆன் ரோடு விலை 4 லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. விலை உயர்ந்த மாடல்களின் விலை 6 லட்சம் ரூபாயை நெருங்குகிறது. ஆன்லைனில் மட்டுமே இப்போது புக்கிங் தொடங்கியிருக்கிறது. விற்பனை அக்டோபர் 23-ம் தேதி தொடங்குகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்