வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (17/10/2018)

கடைசி தொடர்பு:07:34 (17/10/2018)

களமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்!

கடந்த ஆண்டு மே மாதத்தில் இது சர்வதேச சந்தைகளில் களமிறங்கியியிருந்தாலும், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே அதை இந்தியாவில் இசுஸூ வெளியிட்டிருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகிய XL சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக இருக்கும் தனது MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை, 6 கலரில் 26.27 லட்ச ரூபாய் (4X2) மற்றும் 28.23 லட்ச ரூபாய் (4X4) அறிமுகப்படுத்தியுள்ளது, ஜப்பானிய நிறுவனமான இசுஸூ. கடந்த ஆண்டு மே மாதத்தில் இது சர்வதேச சந்தைகளில் களமிறங்கியியிருந்தாலும், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே அதை இந்தியாவில் இசுஸூ வெளியிட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இங்கே MU-X முதன்முறையாக டயர் பதிக்கும்போது, அதன் பேஸ்லிஃப்ட் மாடல் உலகளவில் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டது!

 

டிசைனில் என்ன மாற்றம்?

 

இசுஸூ

 

பேஸ்லிஃப்ட் மாடல் என்பதைப் பறைசாற்றும் விதமாக, D-MAX பிக்-அப் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவியின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன. LED DRL உடனான Bi-LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், புதிய பம்பர்கள் மற்றும் 18 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள் இதற்கான உதாரணம். டூயல் டோன் ஃப்னிஷ் கொண்ட ஸ்பாய்லர் மற்றும் Shark Fin Antenna, இந்த 7 சீட்டர் எஸ்யூவியின் டிசைனைச் சற்று ஸ்போர்ட்டியாகக் காட்டுவதற்கு உதவுகின்றன. ESC, TCS, HDC, HSA, ABS, EBA, EBD, ISOFIX என MU-X எஸ்யூவியில் ஏற்கெனவே இருக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன், 6 காற்றுப்பைகள் சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். 4 வீல் டிரைவ் மாடலில் இருக்கும் ‘Shift On The Fly’ டயல் மற்றும் 230 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக, ஆஃப் ரோடிங்கில் இது அசத்தலாம். 

 

கேபினில் என்ன புதுமை?

 

இசுஸூ

 

தொடுவதற்கு மென்மையான பிளாஸ்டிக்கால் டேஷ்போர்டு செய்யப்பட்டிருப்பதுடன், சென்டர் கன்சோலில் இருக்கும் சில்வர் வேலைப்பாடும், ‘Lava Black’ கேபினுக்குப் பிரிமியம் உணர்வைத் தருகின்றன. மேலும் Quilted லெதர் சீட்ஸ், ரூஃப்பில் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும் ஸ்க்ரீன், ஆர்ம் ரெஸ்ட் மற்றும் கப்ஹோல்டருடன் கூடிய 60:40 ஸ்ப்ளிட் வசதிகொண்ட இரண்டாவது வரிசை இருக்கை, 3 USB போர்ட் மற்றும் பவர் பாயின்ட், பவர்டு டிரைவர் சீட், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ரிவர்ஸ் கேமரா, 3 வரிசைக்கும் ஏசி எனப் பிராக்டிக்கல் & மாடர்ன் அம்சங்கள் இங்கே இடம்பெற்றிருக்கின்றன.

 

மெக்கானிக்கலாக No Change!

 

இசுஸூ

 

ஆனால், எதிர்பார்த்தபடியே, இன்ஜின் - கியர்பாக்ஸ் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை; எனவே, MU-X பேஸ்லிஃப்ட் மாடலில் இருக்கும் 4JJ1 சீரிஸ் 3.0 லிட்டர் Ddi VGS டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு Sequential Shift  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 177bhp பவர் மற்றும் 38kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இன்ஜின் - கியர்பாக்ஸ் செட்-அப் போலவே, இந்த எஸ்யூவியின் 5 வருட வாரன்ட்டி மற்றும் 5 வருடம்/1.5 லட்சம் கிமீக்கான இலவச Periodic மெயின்டனென்ஸ் திட்டத்திலும் (5ECURE) எந்த வித்தியாசமும் இல்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க