சபரிமலைக்கு குழந்தைகளுடன் வந்த ஆந்திரப் பெண்ணின் காலில் விழுந்த போராட்டக்காரர்கள்! | In Sabarimalai Ayyappan Temple Police Takes Lathi Charge

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (17/10/2018)

கடைசி தொடர்பு:17:32 (17/10/2018)

சபரிமலைக்கு குழந்தைகளுடன் வந்த ஆந்திரப் பெண்ணின் காலில் விழுந்த போராட்டக்காரர்கள்!

சபரிமலை


சபரிமலைக்கு குழந்தைகளுடன் வந்த ஆந்திர பெண்ணின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் தடுத்தனர். அதையும் மீறி அந்தப் பெண் சென்றதால் அவரைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்தப் பெண்ணை பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்குப் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. பல்வேறு பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் சபரிமலைக்கு பயணம் செய்யும் பெண்களைத் தடுத்து நிறுத்திய வண்ணம் இருந்தனர். பலரையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி அவர்களை உள்ளே நுழைய விடாமல் போராட்டம் செய்தனர். இத்தகைய குழப்பங்கள், சர்ச்சைகள் குறையாத நிலையில் இன்று பெண் ஒருவர் தன் 2 குழந்தைகளுடன் நிலக்கல் பகுதி வரை சென்றார். அங்கு போராட்டக்காரர்கள் அவரின் காலில் விழுந்து கோயிலுக்குள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தினர். அதை மீறி அவர் சபரிமலைக்குச் செல்ல முயன்றார்.

அவரைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அந்தப் பெண்ணை, காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். சபரிமலைகு வந்த பெண்ணின் பெயர் மாதவி (40). ஆந்திராவைச் சேர்ந்த அவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார்.