வெளியிடப்பட்ட நேரம்: 05:59 (18/10/2018)

கடைசி தொடர்பு:13:37 (18/10/2018)

இன்னும் முடியலபா... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்!

தீபாவளி வருவதற்கு முன்பாகவே தீபாவளிக்கான ஆன்லைன் விற்பனை ஆரம்பித்துவிட்டது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் என ஏகப்பட்ட ஆன்லைன் விற்பனை தளங்கள் ஆஃபர்களை அள்ளி வீசிவருகின்றன.

விழாக்கால விற்பனை என்றாலே அமேசான் எனக் கூறும் அளவுக்குக் கடந்த வருடம் வரை மூன்று நாள், நான்கு நாள் தள்ளுபடி விற்பனையை அந்நிறுவனம் செய்துவந்தது. ஆனால், இந்த வருடம் அமேசானுக்குப் போட்டியாக ஃபிளிப்கார்ட்டும் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. இரண்டு நிறுவனங்களும் கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி போட்டிப்போட்டுக்கொண்டு தீபாவளிக்கான தள்ளுபடி விற்பனையை நடத்தி வந்தது. பிக் பில்லியன் டே ஃப்ளிப்கார்ட்... கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் அமேசான் என நடத்திய தள்ளுபடி விற்பனையால் இரு நிறுவனங்களுமே பல ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் பார்த்தன

இதற்கிடையே, தீபாவளிக்கு இன்னும் நாள்கள் இருப்பதால் மீண்டும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் தள்ளுபடி விற்பனையை நடத்த அமேசான் முடிவு செய்துள்ளது. வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐந்து நாள்கள் தள்ளுபடி விற்பனை நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நகரம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து தங்களது விற்பனையைத் திட்டமிட்ட அமேசான் முதல் சீஸனில் 80 சதவிகிதம் அளவில் புதிய கஸ்டமர்கள் பொருள்கள் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மீண்டும் தள்ளுபடி விற்பனை அறிவித்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீபாவளி போனஸ் பத்தரம்யா..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க