ஆக்டிவா மற்றும் ஆக்ஸஸுக்குப் போட்டி... வருகிறது ஹீரோ Destini 125சிசி ஸ்கூட்டர்! | Hero to launch Destini 125 on 22nd october, to rival access and activa!

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (18/10/2018)

கடைசி தொடர்பு:06:30 (18/10/2018)

ஆக்டிவா மற்றும் ஆக்ஸஸுக்குப் போட்டி... வருகிறது ஹீரோ Destini 125சிசி ஸ்கூட்டர்!

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இரண்டு 200சிசி பைக்குகள் மற்றும் இரண்டு 125சிசி ஸ்கூட்டர்களைக் காட்சிபடுத்தியது ஹீரோ. எப்படி 200சிசி பைக்குகளில் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டதோ, அதேபோல 125சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றைக் களமிறக்க முடிவு செய்திருக்கிறது ஹீரோ. அதன்படி வருகின்ற அக்டோபர் 22, 2018 அன்று, Destini 125சிசி ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 110சிசி டூயட் ஸ்கூட்டரின் 125சிசி வெர்ஷன்தான்! 

 

டிசைன் மற்றும் வசதிகளில் என்ன வித்தியாசம்?

 

Destini

 

ஹீரோவின் முதல் 125சிசி ஸ்கூட்டராக இருக்கப்போகும் Destini, ஆக்டிவா 125 மற்றும் ஆக்ஸஸ் 125 ஆகியவற்றுடன் போட்டி போடும்விதமாக, ஒரு பேமிலி ஸ்கூட்டராகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது; எனவே கிராஸியா மற்றும் என்டார்க் உடன், நவம்பர் மாதத்தில் வெளிவரப்போகும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 போட்டிபோடலாம். 110சிசி மாடலுடன் ஒப்பிடும்போது, பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள், டூயல் டோன் சீட், சிங்கிள் பீஸ் கிராப் ரெயில், முன்பக்க Apron-ல் இண்டிகேட்டர்கள், பாஸ் லைட் ஸ்விட்ச், i3S சிஸ்டம், அலாய் வீல்கள் எனக் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள், இந்த 125சிசி மாடலில் தெரிகின்றன. மற்றபடி சைடு ஸ்டாண்ட் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டருடன் கூடிய செமி-டிஜிட்டல் மீட்டர், சீட்டுக்கு அடியே மொபைல் சார்ஜிங் பாயின்ட், External பெட்ரோல் டேங்க் மூடி, IBS பிரேக்ஸ், 10 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், மெட்டல் பாடி எனப் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன.

 

இன்ஜின் பர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கும்?

 

Destini 125

 

Destini 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 125சிசி இன்ஜின் - CVT கூட்டணி, 8.7bhp பவர் மற்றும் 1.02kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.  ஆனால் தனது போட்டியாளர்களைவிட இதன் எடை அதிகமாக இருப்பதால்,  இந்த ஸ்கூட்டரின் பர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கும் என்பது, போகப்போகத்தான் தெரியும்; மேலும் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைப் போலவே, Destini 125 ஸ்கூட்டரின் விலையில் ஹீரோ ஆச்சர்யங்களை நிகழ்த்துவதற்கான சாத்தியம் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க