வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (18/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (18/10/2018)

ஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்! 

ந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி ஒருபுறம் இருக்க ஆன்லைன் நிறுவனங்கள் மீது வரும் புகார்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.  

ஆன்லைன் ஷாப்பிங்

இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களில் 41.7 சதவிகிதம் பேர் 31 வயது முதல் 40 வரை உள்ள வயதினரே அதிகம். அதிலும், பெரும்பாலும் நேரடி கடைகளுக்குச் சென்று வாங்குவதே அதிகம். இருந்தும் அதிக சலுகைகள், அதிகமான வெரைட்டி போன்ற பல்வேறு காரணமாக ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் விற்பனையில் அதிகளவில் குறைபாடுகள் இருப்பதாகத் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு பல்வேறு வாடிக்கையாளர்கள் அதிகளவில் புகார்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதும் புகார்கள் குவிந்துள்ளன. இந்தியாவில் 65% பேர் அமேசான் ஷாப்பிங்கைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் 28.6% பேர் ஃபிளிப்கார்ட் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் பிற ஆன்லைன் நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றனர். 

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்கைப் பயன்படுத்துவோர்கள் பல்வேறு காரணங்களால் புகார் எழுப்புகின்றனர். அதில், கடந்த செப்டம்பர் மாதத்தைவிட இந்த மாதம் 2% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 18% புகார்கள் மட்டுமே வந்த நிலையில் இந்த மாதம் 20% புகார்கள் வந்துள்ளன. அதுமட்டுமின்றி தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் மீது 12 சதவிகிதமும் வங்கித் துறை மீது 8 சதவிகிதமும் புகார்கள் பதிவாகியுள்ளன. இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6,908 புகார் மட்டுமே வந்தது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 8,500 புகார்கள் வந்துள்ளன. இதில், செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரையிலான காலத்தில் மட்டும் ஃபிளிப்கார்ட் மீது 1,236 புகார்களும் அமேசான் மீது 1,052 புகார்களும் பே.டி.எம் மால் மீது 765 புகார்களும், ஸ்னாப்டீல் மீது 400 புகார்களும் பதிவாகியுள்ளன.

அதுமட்டுமின்றி வரும் புகார்கள் மீது பல்வேறு நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுகிறது. இதன் அடிப்படையில், ஃபிளிப்கார்ட் நிறுவனம் 1,125 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவாக அதிகளவில், பொருள்களைத் திரும்பப் பெறுதல் மற்றும் ஆர்டர்களை நீக்கம் செய்வதில்தான் புகார்கள் அதிகம் பதிவாகுவதாகப் பல்வேறு நிறுவனங்கள் கூறுகின்றன, 

நீங்க எப்படி பீல் பண்றீங்க