வெளியிடப்பட்ட நேரம்: 05:33 (19/10/2018)

கடைசி தொடர்பு:07:59 (19/10/2018)

2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா!

ஆக்டிவா... ஏறக்குறைய பல ஆண்டுகளாக, இது 'இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்' என்கிற பெருமையைத் தன்வசம் வைத்திருக்கிறது.

ஆக்டிவா... ஏறக்குறைய பல ஆண்டுகளாக, இது 'இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்' என்கிற பெருமையைத் தன்வசம் வைத்திருக்கிறது. தற்போது இந்தப் பண்டிகை காலத்தில், நம் நாட்டில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை, 2 கோடியைத் தாண்டிவிட்டதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்தச் சாதனையைப் படைத்திருக்கும் ஒரே ஸ்கூட்டர் இதுதான்; ஏனெனில் பைக்குகளில் அந்தப் பெயரை ஹீரோ ஸ்ப்ளெண்டர் கொண்டிருக்கிறது.

 

ஆக்டிவா

 

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் ஒரு கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு, 15 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது ஹோண்டா. ஆனால், அடுத்த ஒரு கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கு, அவர்களுக்குத் தேவைப்பட்டது வெறும் 3 ஆண்டுகளே! இந்தியா ஸ்கூட்டர் மயமாகிக் கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது.

கடந்த 2001-ம் ஆண்டில், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் டூ-வீலர்தான் ஆக்டிவா; ஸ்கூட்டர் சந்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில், அதை இந்தியாவில் மீட்டெடுத்த வரலாறு, இதனையே சேரும். இந்தியாவில் 18 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஆக்டிவா, தற்போது ஐந்தாவது தலைமுறையில் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தக்கூடிய வாகனமாக இது இருந்ததே, இந்த ஸ்கூட்டரின் வெற்றிக்கான பிரதான காரணி.

 

activa

 

ஆக்டிவாவின் பாய்ச்சலைக் கண்டு, உலகளவில் பைக்குகளுக்குப் பெயர்பெற்ற நிறுவனங்களே (யமஹா, சுஸூகி, ஏப்ரிலியா), இந்தியாவில் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் தொடங்கியதுதான் முரண். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், LED ஹெட்லைட் கொண்ட ஆக்டிவா 5G அறிமுகமானது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க