வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (19/10/2018)

கடைசி தொடர்பு:17:45 (19/10/2018)

அதிகரிக்கும் டிமாண்ட்! 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ

இந்தியாவில், 4 மீட்டருக்குள் தயாரிக்கப்படும் கார்களுக்கு வரிச்சலுகை இருக்கிறது. இந்த வரிச்சலுகையைப் பயன்படுத்தி, 4 மீட்டர்களுக்குள் கொண்டுவரப்படும் எஸ்யூவி கார்கள், இந்தியாவில் செம ஹிட் அடிக்கின்றன. இந்த ரேஸில், இப்போது இசுசூவும் களம் இறங்குகிறது

ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹோண்டா WR-V என இந்த செக்மென்ட்டில் பல கார்கள் இப்போது விற்பனையில் இருக்கின்றன. இந்த மினி எஸ்யூவி செக்மென்ட்டில் புது காரை களமிறக்கத் திட்டமிட்டு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது இசுசூ.

இசுசூ

ஜப்பானின் எஸ்யூவி கார்கள் தயாரிப்பு நிறுவனமான இசுசூ எம்யூ-X என்னும் மெகா சைஸ் எஸ்யூவி காரையும், டிமேக்ஸ், வி-க்ராஸ் என்னும் பிக்-அப், க்ராஸ் ஓவர் வாகனங்களையும் இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது. மினி சைஸ் எஸ்யூவிக்களுக்கு இப்போது டிமாண்ட் அதிகரித்திருப்பதால், மினி சைஸ் எஸ்யூவி தயாரிப்பில் இறங்கியிருக்கிறது இசுசூ.

ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களுடன் போட்டிப்போட இருக்கும் இந்த காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மினி எஸ்யூவி-யில் 4 வீல் டிரைவ் ஆப்ஷனையும் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது இசுசூ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க