வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (20/10/2018)

கடைசி தொடர்பு:17:10 (20/10/2018)

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை 40% சரிவு; பைக் 138% அதிகரிப்பு!

லகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பிரமாண்டமான பல பெரிய கார்களுக்கே சவால்விடும் வகையில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்கள், வெற்றிகரமாக விற்பனை ஆகிவருகின்றன. 

விற்பனை

உலகிலேயே முதல் நாடாக, 100 சதவிகித எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட நாடாக நார்வே தன்னை அறிவித்தது. 2030-க்குள் எலெக்ட்ரிக் வாகன நாடாகத் தன்னை மாற்றிக்கொள்ள ஜெர்மனி முயற்சி மேற்கொண்டுள்ளது. சீனாவும் இதில் முழு முனைப்புக்காட்டிவருகிறது. 2013-ம் ஆண்டு, தேசிய மின்சார இயக்கப் பணித்திட்டம் என்பதன் அடிப்படையில், 2020-ம்  ஆண்டுக்குள் 70 லட்சம் எலெக்ட்ரிக் வண்டிகள் இந்தியச் சாலைகளில் பயணிக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது அன்றைய மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு.  2040-க்குள் உலகின் 35% நாடுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே கொண்டவையாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரால் சொல்லப்படுகிறது. 

விற்பனை

இந்தியாவில், 2020-ம் ஆண்டுக்குள் 70 லட்சத்துக்கும் அதிகமான எலெக்ட்ரிக் வண்டிகள் சாலைகளில் பயணிக்க வேண்டும் என்கின்ற கனவுக்கு ஆபத்து வந்துவிடுமோ எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு, 2017-18 நிதியாண்டு விற்பனையில் 40% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், வெறும் 1,200 எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், எலெக்ட்ரிக் பைக் விற்பனை 138% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 54,800 எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் 2,000 என்ற அளவிலேயே இருக்கிறது. 2017-18 ம் ஆண்டுகளில் 1200 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க