வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (20/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (20/10/2018)

டாப் 10 ஸ்கூட்டர்கள்: ஆக்டிவா விற்பனை சரிவு!

வ்வொரு மாதமும் வாகன விற்பனையின் நிலவரம் வெளியிடப்படும்போது, அதிகமாக விற்பனையான டாப் 10 டூ வீலர்களின் பட்டியலில் ஹோண்டாவின் ஆக்டிவாதான் எப்போதும் முன்னிலையில் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்டிலும்  இந்த ஆண்டு 38,113 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது.

விற்பனை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனையானது 3 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல், இந்த மாதம், மொத்தம் 2,84,809 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மாதம் 3,10,851 என இருந்த எண்ணிக்கை இந்த மாதம் 2,84,809 ஆக விற்பனை சரிந்துள்ளது. 

செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கூட்டரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 10 வது இடத்தில் இருந்த ஹோண்டா Grazia-வை பின்னுக்குத் தள்ளி டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 9 வது இடத்தில் இருந்த ஹீரோ ப்ளெஷர் பத்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதில், கடந்த மாதம் 18,024 ஸ்கூட்டர்கள் மட்டுமே, விற்பனையான டிவிஎஸ் என்டார்க் மாடலில், இந்த மாதம் 20,820 ஸ்கூட்டர்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 

செப்டம்பர் மாதம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்!

மாடல் யூனிட்
ஹோண்டா ஆக்டிவா 2,84,809
டிவிஎஸ் ஜூபிட்டர் 90,738
சுஸுகி ஆக்ஸஸ் 46,931
ஹோண்டா டியோ 44,397
ஹீரோ மேஸ்ட்ரோ 37,367
ஹீரோ டூயட் 23,124
டிவிஎஸ் என்டார்க் 20,820
யமஹா ஃபேஸீனோ 20,268
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ 16,846
ஹீரோ ப்ளெஷர் 16,578

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க