Published:Updated:

சித்தூரில் பலத்த மழை: சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்

சித்தூரில் பலத்த மழை: சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்
சித்தூரில் பலத்த மழை: சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னைக்கு வந்த ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே வேப்பகுண்டா பகுதியில் நேற்று,  சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. அப்போது, மும்பையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ர‌யில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தது.

பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக ரயில் வழக்கமான வேகத்தில் செல்ல முடியாமல் தடுமாறியது. அதேநேரத்தில் ரயில் இன்ஜினிலும் பழுது ஏற்பட்டது. இதனால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

##~~##
பலத்த மழை காரணமாக  மின்சாரம் தடை செய்யப்ப‌ட்டது. ரயிலில் இருந்த‌ பயணிகள் இருளில் தவித்தனர்.
ரயில்வே இன்ஜினியர்கள்  வந்து, இன்ஜினில் ஏற்பட்டு இருந்த பழுதை நீக்கினர்.  3 மணி நேரத்துக்குப் பிறகு ர‌யில் சென்னைக்குப் புறப்பட்டது.