Published:Updated:

திருவள்ளூர், அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்

திருவள்ளூர், அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்
திருவள்ளூர், அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்
திருவள்ளூர், அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக திருவள்ளவூர், அரக்கோணம் மின்சார ரயில்களின் சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) இந்த பகுதிகளுக்கிடையே செல்லும் மின்சார ரயில்கள் விரைவு மின்சார ரயில் பாதையில் இயக்கப்படும்.

##~~##
இதனால் அந்த ரயில்கள் வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும். அந்த ரயில்களின் விவரம் வருமாறு:
சென்னை மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, காலை 9.35, 9.45, 11.30, நண்பகல் 12.15 மணிக்கு திருவள்ளூர் புறப்படும் மின்சார ரயில்கள், காலை 10, 11.45 மணிக்கு திருத்தணி புறப்படும் மின்சார ரயில்கள், காலை 10.30, நண்பகல் 12 மணிக்கு கடம்பத்தூர் புறப்படும் மின்சார ரயில்கள், காலை 11 மணிக்கு அரக்கோணம் புறப்படும் மின்சார ரயில் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.45 மணிக்கு திருவள்ளூர் புறப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்களின் சேவையில் மேற்கண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.