வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (21/10/2018)

கடைசி தொடர்பு:06:30 (21/10/2018)

எந்தெந்த ஊரில் #MeToo ட்ரெண்ட்! கூகுள் வெளியிட்ட வரைபடமும்... இந்தியாவின் பரிதாப நிலையும்...

உலங்கெங்கிலும் #MeToo எங்கெல்லாம் ட்ரெண்ட் ஆகியுள்ளது என்பதைக் கூகுள் நிறுவனம் வரைபடம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவின் நிலைமை மிகவும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

#MeToo

#MeToo குறித்த அறிமுகம் தற்போது இந்தியாவுக்குத் தேவையில்லை என்றே கூறலாம். #MeToo ஹேஷ்டேக் மூலம் நாள்தோறும் பிரபலங்கள் முதல் சாதாரணமானவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் புகார்களை தொடுத்து வருகின்றனர். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்க நடிகை அலைஸா மிலானோ (Alyssa Milano), தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சமூக வலைதளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பதிவிட்டார். அமெரிக்காவில் தொடங்கிய இந்த #MeToo ஹேஷ்டேக் இன்று பிரபல தமிழ் நடிகர் அர்ஜுன் வரை வந்து நிற்கிறது. 

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக #MeToo இருப்பதைப் பார்க்க முடிந்தாலும், இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என எதிர்தரப்பினர் சொல்வதையும் கேட்க முடிகிறது. குற்றம் சாட்டியவர், எதிர் தரப்பினர் எனச் சிலர் #MeToo குறித்து விளக்கங்களையும், சிலர் வழக்குகளையும் தொடுத்து வருகின்றனர். இந்நிலையில் உலங்கெங்கிலும் #MeToo எங்கெல்லாம் ட்ரெண்ட் ஆகியுள்ளது என்பதைக் கூகுள் நிறுவனம் #MeToo ரைஸிங் டிஜிட்டல் வரைபடம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. 

அமெரிக்க நடிகை அலைஸா மிலானோ முதன்முதலாக #MeToo மூலம் பாலியல் புகாரைத் தெரிவித்த தினமான 2017ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி முதல் தற்போது வரை எங்கெல்லாம் #MeToo பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை உலக வரைபடம் மூலம் இணைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஊர்களிலும் தெரிவிக்கப்படும் புகார்களை விளக்குகள் ஒளிரும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரைபடத்தில் அந்த ஒளிகளை கிளிக் செய்யும்போது பாலியல் தொடர்பான செய்திகளும் வருகிறது. அமெரிக்க கவிஞர் மியுரியல் ருகீசரின் எழுத்துகளை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள இதில், அமெரிக்கா, லண்டன் என ஒரு நாடு விடாமல் இடம்பெற்றுள்ளது. 

கூகுள் ட்ரெண்ட்

கூகுள் வெளியிட்ட வரைபடத்தின் விஷ்வலை காண இங்கே கிளிக் செய்யவும்...

இந்த வரைபடத்தில் இந்தியாவின் நிலைமையோ பரிதாபமே. கடந்த வருடம் #MeToo ஹேஷ்டேக் அறிமுகமான போது இந்தியாவில் 7 இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டதாகக் காட்டுகிறது கூகுள். அதன்பின் இன்று வரையிலான #MeToo ரைஸிங்கை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்க வைக்கிறது. போகப் போக அதிகரிக்கும் புகார்ளால் பூலோக வரைபடத்தில் இந்தியா எரிமலையாக எரிகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து புகார்கள் எழுந்துள்ளதால் அதனைச் சித்தரிக்கும் வகையில் இது வெளிக்காட்டுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் தொல்லைகள் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது என்பதற்குச் சான்றே இந்த வரைபடம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க