டாடாவின் டியாகோ JTP & டிகோர் JTP கார்களில் என்ன ஸ்பெஷல்? | Tata to launch the much awaited JTP twins on october 26 !

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (21/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (21/10/2018)

டாடாவின் டியாகோ JTP & டிகோர் JTP கார்களில் என்ன ஸ்பெஷல்?

கூடுதல் பர்ஃபாமென்ஸுக்காக, இந்த Revotron இன்ஜினின் இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பில் சில மாறுதல்களை டாடா செய்திருக்கலாம்.

 

டியாகோ JTP மற்றும் டிகோர் JTP... கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பரபரப்பைக் கிளப்பிய இந்த பர்ஃபாமென்ஸ் எடிஷன் கார்களை, வருகின்ற அக்டோபர் 26, 2018 அன்று அறிமுகப்படுத்துகிறது டாடா மோட்டார்ஸ்.

 

JTP

 

இதில் இந்த நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவியான நெக்ஸானில் இருக்கும் 1.2 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் எனத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் கூடுதல் பர்ஃபாமென்ஸுக்காக, இந்த Revotron இன்ஜினின் இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பில் சில மாறுதல்களை டாடா செய்திருக்கலாம். எனவே நெக்ஸானில் 110bhp பவர் மற்றும் 17kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த 3 சிலிண்டர் இன்ஜின், இந்த JTP மாடல்களில் கூடுதல் செயல்திறனைக் கொண்டிருக்கலாம்.

 

Tiago & Tigor

 

அதேபோல சிறப்பான ஆக்ஸிலரேஷனை மனதில்வைத்து, நெக்ஸானில் இருக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுக்குப் பதிலாக, வழக்கமான 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் இன்ஜினுடன் இணைக்கப்படும் எனத் தெரிகிறது. காரின் ஸ்போர்ட்டியான கையாளுமையை மனதில்வைத்து, சஸ்பென்ஷன் அதற்கேற்ற செட்-அப்பைக் கொண்டிருக்கும் என்பதுடன், இதற்காக வழக்கமான மாடலைவிட இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் குறைக்கப்படலாம். மேலும் வெளிப்புறத்தில் புதிய பம்பர்கள், ஏர் வென்ட் உடனான Fender & பானெட், அளவில் பெரிய 15 இன்ச் அலாய் வீல்கள், கறுப்பு ரூஃப் & மிரர் மற்றும் சிவப்பு பேட்ஜிங் இருக்கின்றன.

 

Tata Motors

 

கேபினைப் பொறுத்தமட்டில் அலுமினிய பெடல்கள், சிவப்பு நிற வேலைப்பாடுகளுடன் கூடிய கறுப்பு டேஷ்போர்டு மற்றும் லெதர் சீட்கள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், 5 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் Harman ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. Smoked ப்ரொஜெக்டர் ஹெட்லைட் உடன், ட்வின் எக்ஸாஸ்ட் பைப் மற்றும் பாடி கிட் இருப்பது செம ஸ்டைல். வழக்கமான மாடல்களுடன் ஒப்பிடும்போது, டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களின் விலைகள், சுமார் 1 லட்ச ரூபாய் வரை அதிகமாக இருக்கலாம்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க