வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (22/10/2018)

கடைசி தொடர்பு:13:00 (22/10/2018)

"ப்ரோ'ன்னு கூப்பிடாதீங்க!"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த்

சினிமா பிரபலங்கள், சமூகம் சார்ந்த  தங்களின் கருத்துகளை ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். அப்படிப் பதிவிடும்போது , அந்தக் கருத்துக்கு ஏற்புடையவர்கள் அதை ரீ-ட்வீட் செய்து ஆதரவு தெரிவிப்பதும், அந்தக் கருத்துக்கு ஏற்ப மற்றவர்கள் விமர்சிப்பதும் வாடிக்கையாக நடப்பது. சமீபத்தில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிப்பது தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

டிவிட்டர்

அதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்த ட்வீட்டில் ஒருவர், " ஏன் ப்ரோ, உங்களுக்கு பட வாய்ப்பு ஏதும் இல்லையா..." எனக் கேட்டிருந்தார்.  அதற்குப் பதில் தெரிவித்த சித்தார்த் , "நான் தற்போது நான்கு படங்கள் மற்றும் ஒரு வெப்-சீரிஸில் நடித்துவருகிறேன் . ட்விட்டரில் எனது கருத்தைப் பதிவிட ஒரு நிமிடம் போதும்.

சித்தார்த்

அதுமட்டுமின்றி, இன்றைய மோசமான உலகில் நமது கருத்துகளை வெளிப்படுத்தவேண்டியது அவசியமான ஒன்று. மேலும், என்னை ப்ரோ எனக் கூப்பிட வேண்டாம் " எனவும் பதிவிட்டிருந்தார். இந்த உரையாடல் முழுக்க அவர், 'டா' என ஒருமையில் அவரைப் பேசினார் சித்தார்த். சிலர், இதுபோன்ற கேள்விகளுக்கு இப்படிதான் பதில் சொல் வேண்டும் என  சிலரும், இப்படிச் சொல்லியிருக்க வேண்டாமென சிலரும் சித்தார்த்திடம் தெரிவித்திருந்தனர்.