வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (22/10/2018)

கடைசி தொடர்பு:19:48 (22/10/2018)

ஒரே இடத்தில் 40 வகையான பட்டாம்பூச்சிகள்... மிஸ் பண்ணாதீங்க! #VikatanPhotoStory

புதுப்பொலிவடைந்துள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒரே இடத்தில் 40 வகையான பட்டாம்பூச்சிகள்... மிஸ் பண்ணாதீங்க!  #VikatanPhotoStory

ண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்து வைக்கப்பட்டது. 200 வகையான தாவரங்கள் அப்போது இங்கே நடப்பட்டிருந்தன. 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இங்கே அன்றாடம் வந்துகொண்டிருந்தன. 

வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் மாதம் சென்னையைத் தாக்கிய வர்தா புயல், வண்டலூரையும் விட்டுவைக்கவில்லை. புயலால் இந்தப் பூங்கா கடும் சேதமடைந்தது. இந்தப் பகுதியில் நடப்பட்டிருந்த தாவரங்கள் அதிக சேதாரத்திற்குள்ளாகின.

பட்டாம்பூச்சி

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காகப் பூங்கா மூடப்பட்டது. 

Butterfly

இந்நிலையில் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் ஆகியவை முடிந்து தற்போது மீண்டும் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்துவைக்கப்பட்ட இந்தப் பூங்காவில் இனிப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். 

Butterfly

நேற்று விடுமுறை தினமாதலால் நிறைய குழந்தைகள் வண்டலூர் பூங்காவுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் வண்ணத்துப்பூச்சி இல்லம் மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்து நிறைய குழந்தைகள் உற்சாகமாக உள்ளுக்குள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். 

Butterfly

புதிதாகத் திறக்கப்பட்டிருந்ததால் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருந்தது. இதனால் நிறைய பட்டாம்பூச்சிகளைப் பார்க்க முடியவில்லை எனச் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்தனர் வந்திருந்த பொதுமக்களில் சிலர். வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த உள்ளரங்கமும் புதிதாகச் சீரமைக்கப்பட்டு, தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பட்டாம்பூச்சி

புதிதாகத் திறக்கப்பட்ட இந்தப் பூங்கா குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி காமராஜ் என்பவரிடம் பேசியபோது, ``இதுவரை 70 வகையான பூச்சியினங்களைப் பதிவு செய்திருக்கிறோம். இவற்றில் வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே 40 வகைகள். பூங்காவை இப்போதுதான் திறந்திருக்கிறோம். இனிதான் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணத்துப்பூச்சிகள் வந்துசேரும். தொடர்ந்து மறுசீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பட்டாம்பூச்சி

பூங்காவில் இதுவரை கிட்டத்தட்ட 200 வகைகளில், 2,000 தாவரங்களை நட்டிருக்கிறோம். இது இல்லாமல் இன்னும் 3,000 தாவரங்களை இனி நடவிருக்கிறோம். அவ்வப்போது மழை பெய்துகொண்டிருப்பதால், இப்போது நட முடியாத சூழல் நிலவுகிறது. மழைக்காலத்துக்குப் பிறகு மிச்சமுள்ள தாவரங்களை நட்டுவிடுவோம். எந்த விதமான மரங்களையும் நடுவதில்லை. எல்லாமே செடிகள் மட்டும்தான்.

பட்டாம்பூச்சி

குரோட்டலேரியா, தேள் கொடுக்கு, ஆவாரை வகை, மூக்குத்திப்பூ போன்றவை மிகவும் பொதுவானவை. இந்த வகைத் தாவரங்கள் மூலம் அதிக வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்க முடியும். இந்தச் செடிகள் முழுதும் நட்டபின்பு வண்ணத்துப்பூச்சிகளின் வரவு அதிகரிக்கும் என்று கணிக்கிறோம்." என்றார்.

அப்படியே இந்த வீக்கெண்டு ஒரு விசிட் அடிங்க மக்களே!


டிரெண்டிங் @ விகடன்