சுவரில் கறையா? கவலையை விடுங்க பாஸ்! | Need not worry of stained walls anymore Sponsored content

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (22/10/2018)

கடைசி தொடர்பு:17:32 (22/10/2018)

சுவரில் கறையா? கவலையை விடுங்க பாஸ்!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் அலங்கோலமாக இருக்கும் சுவர்... பேனா, பென்சில், ஸ்கெட்ச், இங்க், கிரெயான்ஸ் என  இப்படி எது கிடைத்தாலும்அதை வைத்து சுவற்றில் கிறுக்குவதுதான் அவர்களின் பொழுதுபோக்கே! குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம், இந்த வீட்டில் மட்டுமல்ல,பெரும்பாலானோர் வீட்டில் நடக்கும் வைபவம்தான்... பெற்றோர்களை எந்நேரமும் பிசியாக வைத்திருக்கும் சுட்டிக்குழந்தைகளின் கொட்டங்களைநாம் அடக்கமுயன்றாலும், அதில்தானே அழகும் இருக்கிறது!  பிள்ளையை மாற்றமுடியாது, ஆனால் சுவருக்கு பெயின்ட் அடித்துக்கொள்ளலாமே!

குழந்தைகள் கிறுக்குவது ஒருபுறம் இருந்தாலும், தவறுதலாக நாமும் உணவுப் பொருள்களையோ, கறை ஏற்படுத்தக்கூடிய பிற பொருள்களையோசுவற்றில் கொட்டிவிடுவது உண்டு. இவை நொடிப்பொழுதில் சுவரோடு வினை புரிந்து கறையாக தங்கிவிடுகிறது. இதுபோக, வீட்டில் முக்கியமாகஅழுக்காகும் இடங்களில் ஒன்று சமையல் அறை. இங்குள்ள சுவரை சோப்பு நீர்க் கொண்டு துடைத்தாலும் இந்தவகைக் கறைகளைத் துடைத்தாலும்,இவை போவதில்லை, கறாராக தேய்த்து எடுத்தாலும் பெயின்ட் தேய்ந்து சுவற்றையே நாசம் செய்து, அழகைக் குலைத்துவிடும்.

இப்படிக் குழந்தை செய்யும் தவறோ நாம் செய்யும் தவறோ, வீட்டுச்சுவர் அழகைக் குலைக்கும் கறைகளை இல்லாமல் செய்வதற்கு உபாயம்இருக்கவே செய்கிறது. அதுதான் வருமுன் காப்பது. ஆம், கறை படிவதற்கு முன்பே நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கை. நவீன தொழில்நுட்பத்தில்தயாராகும் ஒரு சூப்பர் பெயின்ட் நமக்கு கைகொடுக்கிறது.

நிப்பான் பெயின்ட் தரும் அற்புதத் தீர்வு!

ஆசியாவின் நம்பர் ஒன் பெயின்ட் நிறுவனமான நிப்பான் பெயின்ட் "Spot-less NXT" எனும் அதன் அதிநவீன பெயின்ட்டை அறிமுகம் செய்துள்ளது.அக்ரிலிக் எமுல்ஷன் பெயின்ட்டான Spot-less NXT காஃபி, பழச்சாறு, கூல் ட்ரிங்க்ஸ், இங்க், கை அச்சுக் கறை போன்ற பலவகையான கறைகளில்இருந்து சுவர்களை பாதுகாக்கிறது. இந்தப் பெயின்டில் உள்ள Swan-Back தொழில்நுட்பம் நீர் சார்ந்த கறைகள், பெயின்டை ஊடுருவி சுவரில் அழுந்திபடிவதைத் தடுத்து, அவைகளை மணிமணியாக ஆக்கி அவற்றைச் சுவரின் மேற்பரப்பிலேயே இருக்கும்படி செய்துவிடுகிறது, இதுவே 'beading effect'ஆகும். இவ்வாறு கறைகள் சுவர்களை பாதிக்காத வண்ணம் காக்கிறது Spot-less NXT. இப்படி மேற்பரப்பில் தங்கும் கறையை, பெயின்டிங்கைகுலைக்காமலேயே விரைவில் நீக்கிவிடவும் முடிகிறது.

நிப்பான் Spot-less NXT-இன் முக்கிய சிறப்பம்சமே பெயின்ட் செய்யும்போதும் சரி, பெயின்ட் செய்தபின்னரும் சரி, காட்டமான நெடியில்லாமல்இருப்பதுதான். பெயின்டிங் என்றாலே, ஐந்தாறு தெரு தள்ளி அப்பீட் ஆகிவிடும் ஒவ்வாமைக்காரர்களுக்கு  இது மிகச் சிறந்த செய்தி. நெடியால்வரும் தலைவலி, கண் எரிச்சல், மூச்சுப் பிரச்னை, மயக்கம், வாந்தி, இவை எதுவும் நமக்கு ஏற்படாமல் காக்கிறது நிப்பான் Spot-less NXT. 

படுக்கை அறை, ஹால், லிவ்விங் அறை மற்றும் சமையல் அறைக்கு ஏற்ற பெயிண்டாக விளங்குகிறது நிப்பான் Spot-less NXT. சந்தைகளில் கிடைக்கும்பல பெயின்ட்கள் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் நச்சு இரசாயனப் பொருள்கள் உள்ளவையாக இருக்கின்றன. ஆனால், உயரியஜப்பானிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Spot-less NXT பெயின்ட் மிகமிகக் குறைந்த அளவே எளிதில் காற்றில் ஆவியாகும் கரிமப் பொருள்கள்(Volatile Organic Compounds) கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகள், மூச்சுப் பிரச்னை உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கும் கூட இந்தப் பெயின்ட்பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இனி குழந்தைகள் சுவற்றில் கிறுக்கினாலோ, வீட்டுக்கு வந்த நண்பர் தவறுதலாக காஃபியை சுவரில் கொட்டிவிட்டாலோ, மனதுக்குள்திட்டவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டு நிப்பான் Spot-less NXTயால் பெயின்ட் செய்யப்பட்ட சுவற்றைத் துடைத்தாலே போதுமானது. கறைஇருந்த சுவடு தெரியாமல் போய்விடும், அதுதான் Spot-less NXT!

நீங்க எப்படி பீல் பண்றீங்க