வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (23/10/2018)

கடைசி தொடர்பு:07:28 (23/10/2018)

விற்பனைக்கு வந்தது ஹீரோவின் புதிய 125சிசி ஸ்கூட்டர் டெஸ்ட்டினி

ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்ட்ரீம், எக்ஸ்பல்ஸ் மட்டுமில்லை, டூயட் 125 என்ற ஸ்கூட்டரையும் காட்சிப்படுத்தியிருந்தது ஹீரோ மோட்டார் கார்ப். எக்ஸ்ட்ரீம் 200 வருகைக்குப் பிறகு தற்போது தனது புதிதாக 125சிசி ஸ்கூட்டரையும் களமிறக்கியுள்ளது ஹீரோ. டெஸ்ட்டினி 125 எனும் இந்த ஸ்கூட்டர் ரூபாய் 54,650 (LX வேரியன்ட்) மற்றும் ரூபாய் 57,500 (VX வேரியன்ட்) எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 

ஹீரோ டெஸ்ட்டினி

ஹோண்டா ஆக்டிவா, ஜூப்பிடர் 125 போல ஃபேமிலி ஸ்கூட்டராக களமிறக்கப்பட்டிருக்கும் டெஸ்ட்டினி டூயட் 110 ஸ்கூட்டரின் ஸ்டைலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஸ்பிளெண்டர் ismart ஸ்கூட்டரில் இருக்கும் i3s தொழில்நுட்பத்தை இந்த ஸ்கூட்டரிலும் கொண்டுவந்துவிட்டார்கள். செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எக்ஸ்டர்னல் ஃப்யூயல் கேப், சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், பாஸ் லைட் போன்ற மற்ற ஸ்கூட்டர்களில் இருக்கும் அம்சங்கள் எல்லாமே இதில் வந்துவிட்டன. பூட் லேம்ப், மொபைல் சார்ஜர், ஆப்ஷனாக வருகிறது. 

 

125சிசி இன்ஜின் கொண்ட ஹீரோ டெஸ்ட்டினி 8.7bhp பவரும், 10.2Nm டார்க்கும் உருவாக்கக்கூடியது. முன்பக்கம் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின் பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் இதில் உள்ளன. 10 இன்ச் அலாய் வீல்தான். ட்யூப்லெஸ் டயர்கள் உண்டு. டிஸ்க் பிரேக் இல்லை டிரம் பிரேக்தான். ஆனால், CBS ஸ்டான்டர்டாக வருகிறது. 125சிசி செக்மன்டிலேயே விலை குறைவான ஸ்கூட்டராக இருந்தாலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக கூட இல்லாத ஒரே ஸ்கூட்டர் டெஸ்ட்டினி 125. புதிய ஹீரோ டெஸ்ட்டினி சுஸூகி ஆக்ஸஸ், ஆக்டிவா 125 மற்றும் டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர்களோடு போட்டிபோடுகிறது.