வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (23/10/2018)

கடைசி தொடர்பு:20:46 (23/10/2018)

"ரெண்டு அவார்டு வாங்கிட்டேன்; சப்போர்ட் பண்ணுங்க!" - 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' சஹானா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' சீசன்2 நிகழ்ச்சியில், அனைவரையும் ஈர்த்துவரும் போட்டியாளர், சஹானா. கண் பார்வையில்லாதது குறையல்ல எனத் தன்னம்பிக்கையுடன் பாடல் பாடியும், அவ்வப்போது பியானோ வாசித்தும் தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர். தற்போது, 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' செட்டில் வைத்து ' India Book Of Records', 'Asia Book Of Records' என்கிற இரண்டு சாதனைகளையும் பெற்றிருக்கிறார் இந்தக் குட்டி தேவதை. இதுகுறித்து சஹானாவின் தந்தை நிரேனிடம் பேசினோம்.

சஹானா

''சஹானா இயல்பாகவே பியானோ கார்ட்ஸைச் சரியாகக் கண்டுபிடித்துவிடுவாள். அந்த விஷயத்தில் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால், ஒரு நிமிடத்தில் வேகமாக பியானோவில் வாசிக்கும் கார்ட்ஸ் பெயரைச் சரியாகச் சொல்லிட முடியுமா என்ற பயம் இருந்துச்சு. ஆனால், ஒரு நிமிஷத்துக்குள் 40 கார்ட்ஸை சரியாகச் சொன்னது ஆச்சர்யம். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குக் கண்டுபிடிக்கணும்னுதான் பிராக்டீஸ் கொடுத்தோம். ' India Book Of Records', 'Asia Book Of Records'- தீர்ப்பாளர் விவேக் சாரும், பியானோ கலைஞர் அனில் ஶ்ரீநிவாசன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த ரெக்கார்டு நடந்துச்சு. சஹானாவுக்கு ஃபேமஸ் பியானோயிஸ்ட் நவ்நீத் சுந்தர், பியானோ கார்ட்ஸ் வாசித்தார். இப்படி ஒரு சாதனைக்கு என் பொண்ணை பண்ணவெச்ச சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் டைரக்டர் விஜயகுமார் சாருக்கு எங்கள் நன்றிகள். இவங்க எல்லோரும் 'உன்னால் முடியும்'னு சஹானாவை உற்சாகப்படுத்தலைன்னா, இது சாத்தியமில்லை. அடுத்து, சஹானாவை கின்னஸ் ரெக்கார்டு பண்ணவைக்க ஆசைப்படறோம்'' எனப் புன்னகைத்தார்.

இது தொடர்பாக சஹானாவிடம் பேசியபோது, ''நான் ரெண்டு அவார்டு வாங்கிட்டேன். எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு. சரிகமப டாப் 6 ஃபைனலிஸ்டில் நான் ரெண்டாவது ஃபைனலிஸ்ட்டாக செலக்ட் ஆகியிருக்கேன். தொடர்ந்து எனக்கு சப்போர்ட் பண்ணுங்க. லவ் யூ'' என்றார், மழலை மாறா குரலில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க