வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (23/10/2018)

கடைசி தொடர்பு:19:44 (23/10/2018)

தீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்

பிஎம்டபிள்யூ நிறுவனம் 2010 மற்றும் 2017-ம் ஆண்டுக்கு இடையில் உற்பத்தி செய்யப்பட்டட 4 சிலிண்டர் மற்றும் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் கார்களை ரீகால் செய்கிறது. 16 லட்சம் கார்கள் உலகளவில் ரீகால் செய்யப்படும் என்றும் அதில் 5 லட்சம் கார்களுக்கு அதிகமாக ஆசியாவில் ரீகால் செய்யப்படும் என்றும் இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிஎம்டபிள்யூ

தென்கொரியாவில் இந்த ஆண்டு மட்டும் 40 பிஎம்டபிள்யூ கார்கள் தீப்பற்றி எரிந்ததால் சோதனைகள் முடியும்வரை இந்தக் கார்களை பயன்படுத்த வேண்டாம் என்று தென்கொரிய அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூவின் தென்கொரியா அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 4,80,000 கார்களை பிஎம்டபிள்யூ ரீகால் செய்திருந்தது மட்டுமல்லாமல் இந்தப் பிரச்னையை விசாரிப்பதாகவும் கூறியிருந்தது.

தற்போது விசாரணை முடிந்தது ``Exhaust Gas Recirculation’’ சிஸ்டத்தில் கூலன்ட் லீக் ஆக சின்ன வாய்ப்பிருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கூலன்ட் சூடான இன்ஜின் மீது பட்டால் காரில் தீப்பொறி உருவாகும். இதன் மூலம் பிரச்னை வர வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் கார்களை சோதனை செய்து பிரச்னை இருப்பது தெரியவந்தால் சரி செய்து தரப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.