வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (24/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (24/10/2018)

6.38 லட்ச ரூபாய்... இந்த விலைக்கு வொர்த்தா ஹுண்டாய் சான்ட்ரோ?!

6.38 லட்ச ரூபாய்... இந்த விலைக்கு வொர்த்தா ஹுண்டாய் சான்ட்ரோ?!

ஹூண்டாய்க்கு இந்தியாவில் முகவரி கொடுத்த கார் சான்ட்ரோ. 1997-ல் 3 லட்சம் என்ற வலையில் விற்பனைக்கு வந்து பிரபலமடைந்த சான்ட்ரோ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஅவதாரம் எடுத்திருக்கிறது. இம்முறை 4.51 லட்சம் - 6.38 லட்சம் ரூபாய் விலையில் வந்துள்ளது. மினி ஹேட்ச்பேக் மாடலாக இருந்தாலும் ஸ்ஃபிட், போலோ போன்ற ஹேட்ச்பேக் கார்களின் விலையில் வந்துள்ள சான்ட்ரோ, கொடுக்கும் காசுக்கு வொர்த்தா?

போட்டியாளர்களும் அதன் விலையும்!

  • மாருதி செலிரியோ - 5.15 - 5.83 லட்சம் ரூபாய்
  • ரெனோ க்விட் - 3.37-4.79 லட்சம் ரூபாய்
  • டாடா டியாகோ - 4.16 - 6.20 லட்சம் ரூபாய்

சான்ட்ரோ

ஸ்டைல்

செலிரியோ, க்விட், டியாகோ கார்களை ஒப்பிடும்போது சான்ட்ரோதான் இந்த செக்மன்டிலேயே இப்போது விலை அதிகமான கார். டாப் வேரியன்ட்டான ஆஸ்டா ரூ.6.38 லட்சம். இதை விட ஒன்றரை லட்சம் விலை குறைவான க்விட்டில் அலாய் வீல்கள் வருகின்றன. 18,000 விலை குறைவான டியாகோவில் பெரிய டயர்களும் சேர்ந்து வருகின்றன. மேலும், க்விட் மற்றும் செலிரியோவின் டிசைன் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. புதிய சான்ட்ரோவின் டிசைன் ஐ10 காரை போலவே உள்ளது.

இன்ஜின்

6 லட்சத்துக்கும் அதிகமான விலையில் இருக்கும் காரில் குறைந்தபட்சம் 1.2 லிட்டர் இன்ஜின் இருக்கவேண்டும். இன்ஜினை பொறுத்தவரை சான்ட்ரோவில் 65bhp பவர் தரும் 1.1 லிட்டர் எப்ஸிலான் இன்ஜின் உள்ளது. 6.20 லட்சத்துக்குக் கிடைக்கும் டியாகோவில் 85bhp பவர் தரும் 1.2 லிட்டர் இன்ஜின் உள்ளது. இன்ஜின் பவர் குறைவுதான். ஆனால், டியாகோவை விட சான்ட்ரோவின் மைலேஜ் அதிகம் கிடைக்கும். மைலேஜ் மட்டும் போதும் என்பவர்கள் சான்ட்ரோவை வாங்கலாம்.

வசதிகள்

வசதிகளைப் பொறுத்தவரை ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் இருக்கும் எல்லா வசதிகளுமே சான்ட்ரோவில் வந்துவிட்டன. 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்டிராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் கேமரா, ரியர் ஏசி வென்ட் போன்றவை இந்த செக்மன்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சான்ட்ரோவில் டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்ற முடியாது, ஹெட்ரெஸ்ட்டையும் அட்ஜஸ்ட் செய்யமுடியாது. ஆனால், இந்த வசதிகள் செலிரியோவிலும், டியாகோவிலும் இருக்கின்றன. 

hyundai santro

பாதுகாப்பு

வசதிகளில் ஸ்கோர் செய்திருந்தாலும் பாதுகாப்பில் அடிவாங்கிவிடுகிறது சான்ட்ரோ. ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், ப்ரீடென்ஷனர், ரியர் டிஃபாகர் மற்றும் வைப்பர் இந்த செக்மன்ட்டில் இருக்கும் எல்லா கார்களிலுமே வருகின்றன. சான்ட்ரோவிலும் டியாகோவிலும் கூடுதலாக ரியர் பார்க்கிங் சென்சார்கள் வருகின்றன. மற்ற மூன்று கார்களிலுமே 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக இருக்கின்றன. சான்ட்ரோவில் டாப் வேரியன்ட்டில் மட்டுமே இரண்டு காற்றுப்பைகள். 5.86 லட்சத்துக்கு விற்கப்படும் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில் 2 ஏர்பேக் இல்லை.

 AMT

ஹூண்டாய் முதல்முறையாக AMT ஆப்ஷன் கொண்டுவந்துள்ளது. மேக்னா (ரூ.6.07 லட்சம்) மற்றும் ஸ்போர்ட்ஸ் (ரூ.6.39 லட்சம்) வேரியன்ட்டுகளில் AMT ஆப்ஷன் கிடைக்கிறது. சான்ட்ரோவில் விலை அதிகமான ஸ்போர்ட்ஸ் AMT வேரியன்ட்டில் ரியர் பார்க்கிங் சென்ஸார், ரிவர்ஸ் கேமரா, இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ரியர் வைப்பர்/வாஷர் இல்லை. டாடா, மாருதி, ரெனோ 3 கார்களிலுமே AMT வேரியன்ட்டில் எல்லா வசதிகளும் வந்துவிடுகின்றன. விலையும் சான்ட்ரோ  AMT-யை விட குறைவு. 

சான்ட்ரோ

கொடுக்கும் காசுக்கு வொர்த்தா?

பேப்பரில் பார்க்கும்போது விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் டியாகோவுக்கு அடுத்தபடியாக அதிக மதிப்பைத் தரும் காராக சான்ட்ரோ உள்ளது. ஆனால், ஸ்டைல் தனித்தன்மை வாய்ந்ததாக இல்லை. வசதிகளை அதிகமாகச் சேர்த்துவிட்டு இன்ஜினில் கை வைத்துவிட்டார்கள். பெரிய இன்ஜின், அலாய் வீல், பெரிய டயர்கள், டூயல் ஏர்பேக், பவர் சீட் அட்ஜஸ்ட்மன்ட், ஸ்டாண்டர்டு ரியர் பார்க்கிங் சென்ஸார் போன்றவை கொடுத்திருந்தால் யோசிக்காமல் வாங்கியிருக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்