வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (25/10/2018)

கடைசி தொடர்பு:18:05 (25/10/2018)

நிதியாண்டு மத்தியில் வருமான வரித் திட்டமிடல்!

வருமான வரிப் பயனை அதிகப்படுத்திக் கொள்வதையும்,  வரிச் செலவினத்தைக் குறைத்துக் கொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ள  நிதியாண்டு மத்தியக் காலம் சிறப்பானதாகும். தனி நபர் சார்ந்த மற்றும் நிதி சார்ந்த நிகழ்வுகள் உங்கள் வரித் திட்டமிடலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எங்களின் குறிப்புகள் நிதியாண்டு மத்தியில்  உங்களின் வருமான வரித் திட்டமிடலுக்கு உதவும்.
உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்ததா அல்லது அதை எதிர்பார்க்கிறீர்களா? 

சம்பளம் வாங்கும் ஒரு நபருக்கு, ஊதிய உயர்வு, வருடாந்திர போனஸ், ஊக்கத் தொகை போன்றவற்றின் காரணமாக அவரது சம்பளம் அதிகரித்தால், அவர் கட்ட வேண்டிய வரித் தொகையும் அதிகரிக்கும். அடிப்படை வருமான வரி வரம்பு மாறும் சூழல் ஏற்படலாம். 

வரிச் சட்டத்தில் மாற்றங்கள் மறு ஆய்வு

2018-19- ம் ஆண்டு பட்ஜெட்டில், நிலைக்கழிவு (Standard Deduction)  ரூ.40,000 அறிமுகம், ஆரோக்கியம் & கல்வித் தீர்வை (Health & Education Cess) 4 சதவிகிதமாக உயர்வு, மூத்தக் குடிமக்களுக்கான வங்கி டெபாசிட்டுகளுக்கான வரி விலக்கு ரூ.50,000 ஆக அதிகரிப்பு போன்ற மாற்றங்கள் வந்துள்ளன. அந்த வகையில், தற்போதைய வரிச் சட்டத்துக்கு ஏற்ப வரி திட்டமிடல் தேவையாக இருக்கிறது. 

தனிநபர் வாழ்க்கையில் மாற்றங்கள்

குழந்தை பிறப்பு, புதிய வீடு வாங்குதல், வேலை மாற்றம், வீட்டிலிருக்கும் பெற்றோர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை போன்ற வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும், ஒருவரது நிதி மற்றும் வருமான வரியில்  தாக்கத்தை ஏற்படுத்தும். 

நிறுவனத்திடம் வரி பிரகடனத்தை (declaration) அறிவிக்கும் முன் மறு ஆய்வு செய்யுங்கள்

ஆண்டு தொடக்கத்தில், ஒவ்வொரு மாதமும் நிறுவனத்திடம்  டிடிஎஸ் (TDS) பிடித்தத்தின் அடிப்படையில், நாம் நமது வரிச் சேமிப்பு முதலீடு மற்றும் செலவுக்கான பிரகடனத்தைத்  தாக்கல் செய்ய வேண்டும். நமது வீட்டுக்கு அதிக சம்பளத்தை எடுத்துச் செல்லும் வகையில் சாத்தியமான அனைத்து வரிக் கழிவுகளையும் நாம் நிரப்பிக் கொடுக்க வேண்டும். தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டைத் தொடங்குவது சிறந்தது. இல்லையெனில், ஆண்டுக் கடைசியில் பெரும் தொகையை முதலீடு செய்வது சவாலானதாக அமைந்து விடும். 

உங்களது வரிக்குட்பட்ட முதலீடுகள் மூலதன ஆதாயத்தை உருவாக்குகிறதா? 

உங்களது முதலீடுகள் சிறப்பாக செயல்பட்டு, அதற்கான பலன்களை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் கட்டவேண்டிய வரியைக் குறைக்க உதவும் வியூகங்களை வகுக்கத் தொடங்குவதற்கு இதுதான் சரியான தருணம். ஆண்டுக் கடைசி நெருங்கி வரும்போது, எந்த முதலீடுகளை நீங்கள் விற்க விரும்புவீர்கள், உங்கள் போர்ட்ஃபோலியோவைச் (portfolio) சமநிலையில் வைத்திருக்க எங்கே மறுமுதலீடு செய்வது என்பது போன்றவற்றைக் கண்டறிய உங்களுக்குக் குறைந்த கால அவகாசமே இருக்கும். 

உங்கள் வரி விலக்குகளை அதிகப்படுத்துங்கள்

வரிச் செலுத்துவோர்களில் பெரும்பாலானோர், வரிச் சேமிப்புக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் கோருவதில்லை.


வரிப் பரிசோதனை மற்றும் மதிப்பீடு செய்வதன் மூலம், உங்களது தனிப்பட்ட நிலைமையுடன் இன்னும் அதிகமாக பரிச்சயமாகி விடுவீர்கள். மேலும், வரவிருக்கும் அனைத்து வரி மாற்றங்களுக்கான சிக்கல்களை நன்றாக புரிந்துகொள்ளவும் தயாராகி விடுவீர்கள். நிதியாண்டின் மத்தியில் செய்யும் வரிப் பரிசோதனை, உங்கள் வரி விவரங்கள் மாறினால், அது எவ்வாறு மாறியது என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, உங்களுக்கான வரிச் சலுகைப் பயன்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க