வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (26/10/2018)

கடைசி தொடர்பு:12:43 (26/10/2018)

வீக் எண்ட் ட்ரிப்பா... செண்பகத் தோப்புக்கு ஒரு விசிட் அடிங்களேன்! #Album

துள்ளிக் குதித்தோடும் மான்களும், பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் அந்த மரங்களையும் காண சில தூரங்கள் பயணப்படுவது என்பது நிச்சயமாக இந்த இடத்தைக் கண்டபின் வீணான செயலாகப் படாது. விடுமுறைப் பொழுதுகளை நல்ல இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கழிப்பதற்கு, தமிழகத்தில் ஏராளமான இடங்கள் உண்டு. அதில் ஒன்று, விருதுநகரில் இருக்கும் செண்பகத் தோப்பு. கோவில்பட்டியிலிருந்து பயணம் செய்தால், இரண்டு மணி நேரத்தில் மேரு மலையின் இயற்கை எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பைக் காண முடியும். சாம்பல் நிற அணிலின் சரணாலயமாக இருக்கிறது இந்தப் பகுதி.

மலையடிவாரத்தில் இருந்து நடக்கத் தொடங்கினால், அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே சாம்பல் நிற அணில்களைப் பார்க்கமுடியும். சிவப்பு மற்றும் கறுப்பு நிற உடலமைப்பும் ரோஸ் நிறத்தில் அழகான மூக்கைக் கொண்ட இந்த அணில்கள், நம் பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும். 

செண்பகா தோப்பு

முழு ஆல்பத்திற்கு இங்கே க்ளிக் செய்க

நீரோடையின் 'சலசல' அழைப்பு, மிக இயல்பாக நீர்வீழ்ச்சியை நோக்கி நம்மை இழுத்துச்செல்லும். இயற்கை அமைத்துக்கொடுத்த இந்த நீர்வீழ்ச்சியில், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாட்டர்கேம்ஸ் விளையாடி மகிழலாம். இந்த வார இறுதியில் பயணத்திற்காகத் திட்டமிடுபவர்கள், இந்த செண்பகத் தோப்பையும் உங்கள் விஷ் லிஸ்ட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க