வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (26/10/2018)

கடைசி தொடர்பு:18:53 (26/10/2018)

வீட்டுப் பொருள்களுடன் புது வீடு வாங்கலாம் வாங்க...!

விழாக்காலம் வந்தாச்சு...! ஊரே மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தங்களது மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் இனிப்புகள், புதுப் புது ஆடைகள் எனப் பகிர்ந்து பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அடுத்து அந்தப் பட்டியலில் இருப்பது தீபாவளி. வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிப் போடவும் இதுவே சரியான நேரம். ஏனெனில் பண்டிகைக் காலங்களில் நமக்கு கூடுதலான சலுகைகள் கிடைக்கின்றன. இதற்கு காரணம் பல நிறுவனங்கள் வீட்டு உபயோகப் பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்வதுதான்.  

இவ்வாறு விற்கப்படும் பொருள்களில் நாம் முதலில் பார்ப்பது என்ன? தரமும்.. விலையும்தான். இப்படி நம் எதிர்பார்ப்பின்படி பொருள்களை மகிழ்ச்சி பொங்க தருவதுதான் 'Viveks' நிறுவனம். வீட்டுக்குத் தேவையான அத்தனைப் பொருள்களையும், 53 ஆண்டு காலமாக மக்களுக்கு விவேக்ஸ் வழங்கி வருகிறது. சுவாமி விவேகானந்தரின் ஆகத் தூண்டுதலால், 1965-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஒரு சிறிய கடையாக 'விவேக் & கோ' நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 50 ஷோரூம்கள் வரை பரவி உள்ளது. 

கிச்சனில் வைக்கும் பாத்திரங்கள் முதல் பாத்ரூமில் உபயோகப்படுத்தும் வாட்டர் ஹீட்டர் வரை வீட்டுப் பொருள்களை விவேக்ஸிடம் இருந்து பெறலாம். தரமானதாக... அதே நேரம் விலையும் மக்களின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் அளவுக்கு விவேக்ஸின் பொருள்கள் உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை சேமித்து ஆதாயமும் பெற்றுக்கொள்கின்றனர். மேலும், விவேக்ஸ் பொருள்களுக்கென தனியாக சர்வீஸ் சென்டர்களும் இருக்கின்றன. மக்களுக்கு விவேக்ஸைப் பிடிக்க இதுவும் ஒரு காரணம்.

 

வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கும் நமக்கு ஒரு வீடே கிடைத்தால் எப்படி இருக்கும்! 

விவேக்ஸில் நீங்களும் வெல்லலாம் ஒரு வீடு

விவேக்ஸில் இந்த விழாக்காலத்தில் பொருள் வாங்குபவர்களுக்கு 'Win A house' ஆஃபர் மூலம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர, கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு 100 டிவி, 100 ஃப்ரிட்ஜ், 5 கார், 25 ஸ்கூட்டி, 100 வாஷிங்மெஷின், 100 மொபைல் போன்களும் பரிசாகக் காத்திருக்கின்றன. 

வரும் தீபாவளிப் பண்டிகைக்கு புதிதாக வீட்டுப் பொருள்களுடன், புது வீட்டையும் சொந்தமாக்கிக்கொள்ள உடனே அருகிலுள்ள விவேக்ஸ் ஷோரூமுக்குச் செல்லுங்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க