வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (27/10/2018)

கடைசி தொடர்பு:10:59 (27/10/2018)

இதெல்லாம்தான் பப்ஜி மொபைல் கேமின் புதிய அப்டேட்!

பப்ஜி மொபைல் கேமில் புதிதாக அப்டேட்(0.9.0) வெளியாகி உள்ளது. 

பப்ஜி

பப்ஜி கேம் நாளுக்கு நாள் வைரலாகிக்கொண்டே வருகிறது. பல லட்ச மக்கள் இதை விளையாடி வரும் நிலையில், பப்ஜி நிறுவனம் புதிதாக ஒரு அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. இதில் விளையாடும் முறையில் சற்று முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததோடு, நைட் மோடு என்ற புது ஆப்ஷனையும் கொண்டு வந்திருக்கிறது. அது மட்டுமன்றி கேமில் காட்டப்படும் மேப்பையும் அப்டேட் செய்துள்ளனர். விளையாடும்போது தங்களுடைய டீமை தேர்ந்தெடுப்பதிலும் முன்னேற்றம் கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முந்தைய அப்டேட்டில் நம்முடன் இணைந்து விளையாடும் ஆட்களை அதுவாகவே வெளிநாட்டில் இருப்பவர்களை தேர்ந்தெடுக்கும். ஆனால், தற்போது வந்திருக்கும் புது அப்டேட்டில் தாய் மொழி நாட்டிலே நம்முடைய டீமை அதுவாகவே தேர்ந்தெடுத்துக்கும் புது அப்டேட் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

இதில் பெரும் போராட்டமாக இருப்பது, நம் டீம் ஆட்களிடமிருந்து ஹெல்த் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் பெறுவது. இந்த அப்டேட்டில் `ஷேர் ஃபார் டீல்ஸ்' என்ற புது ஆப்ஷன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதாவது, நம் டீம் ஆட்களிடமிருந்து பேரம் பேசி அவர்களிடமிருக்கும் ஆயுதத்தைச் சலுகை அல்லது இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி இந்த அப்டேட்டில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது ஹாலோவீன் சீஸன் என்பதால் அது சார்ந்த சில அம்சங்களும் சேர்க்கட்டிருக்கின்றன. இதுபோக அவுட்ஃபிட்ஸ், க்ளாசிக் க்ரேட்ஸ், ராயல் மிஷன் பாஸ் போன்ற சின்னச் சின்ன மாறுதல்களையும் கொண்டு வந்திருக்கிறது, பப்ஜி நிறுவனம்

வின்னர், வின்னர், சிக்கன் டின்னர்!