#MeToo-வின் முதல் ட்வீட் எப்போது வந்தது தெரியுமா? #VikatanInfographics | Timeline of the MeToo Movement

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (27/10/2018)

கடைசி தொடர்பு:08:42 (27/10/2018)

#MeToo-வின் முதல் ட்வீட் எப்போது வந்தது தெரியுமா? #VikatanInfographics

இன்று இணையமெங்கும் #MeToo என்ற ஹேஷ்டேக் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த MeToo என்ற பதம் எப்போது உருவானது தெரியுமா?

காலங்காலமாக தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, உலகமெங்கும் இருக்கும் பெண்கள் தற்போது ஒருமித்த குரலில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இத்தனை காலமும் மௌனமாய் கடந்துபோன துயரங்கள் அனைத்தையும் இன்று தைரியமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற குரல்கள் எப்போது, எங்கிருந்து வந்தாலும் அவை கேட்கப்படாமலேயே போகக்கூடும் என்ற விதி இப்போது மாறியிருக்கிறது. அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் இந்தக் குரல்கள் அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருப்பது #MeToo. பாதிக்கப்பட்ட பெண்களை ஒரே அணியில் திரட்டி, அவர்களுக்கான நியாயத்தை முன்வைக்கும் வாய்ப்பை தற்போது உருவாக்கியிருப்பதும், அதற்கான எதிர்வினைகளைச் சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருப்பதும் இதன் வெற்றிக்கு உதாரணம். இந்த #MeToo எங்கிருந்து தொடங்கியது? ஒரு டைம்லைன்.

#MeToo டைம்லைன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்