வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (30/10/2018)

கடைசி தொடர்பு:16:12 (30/10/2018)

தீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பைக்குகளுக்கு பெயர்போன மிலான் மோட்டார்ஷோ (EICMA 2018) வரும் நவம்பர் 6-ம் தேதி தொடங்கப்போகிறது. கடந்த ஆண்டு மிலான் மோட்டார்ஷோவில் ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் GT 650 பைக்குகளை அறிமுகப்படுத்தியிருந்தது ராயல் என்ஃபீல்டு. இந்தப் பைக்குகள் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில் தனது அடுத்த பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். 

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புது பாப்பர் ஸ்டைல் பைக்

போர்வையில் போர்த்திய ஒரு பைக்கின் படத்தைத் தவிர வேறு எந்தத் தகவலையும் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடவில்லை. நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் மிலான் மோட்டார் ஷோவில் இந்தப் பைக் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. டீசர் படத்தைப் பார்க்கும்போது டிரையம்ப் பாப்பர் பைக்கில் இருப்பது போல சிங்கில் சீட் இதில் இருக்கிறது. அலாய் வீல்கள், LED DRL இருப்பதைப் பார்த்தால் பைக் மாடர்ன் டச்சில் இருக்கும் என்று தெரிகிறது. பெரிய தடியான டயர்களும் டிஸ்க் பிரேக்கும் இருக்கின்றன. நீளமான ஃபிளாட்டான ஹேண்டில்பார் இருக்கிறது. இந்த டிசைன் அம்சங்களின்படி பார்த்தால் புதிய பைக், பாப்பர் ஸ்டைலில் இருக்கிறது. 

ராயல் என்ஃபீல்டு தனது கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 பைக்குகளை அப்டேட் செய்வதாக தகவல்கள் வந்திருந்தன. இதன் நீளமான எக்ஸாஸ்ட்டை பார்க்கும் போது இந்த பைக் கிளாசிக் பைக்குகளின் அப்டேட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் பைக்குக்கு என்ன இன்ஜினை கொண்டுவரப்போகிறார்கள் என்ற ஆர்வம் எல்லோருக்குமே உள்ளது. இதைத் தெரிந்துகொள்ள நாம் இன்னும் 7 நாள் காத்திருக்க வேண்டும்.