வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (31/10/2018)

கடைசி தொடர்பு:14:32 (31/10/2018)

`மறுபடியும் விஜய்கூட சேர்ந்து கலக்கப்போறேன்!" - 'எரும சாணி' ஹரிஜா

ன்றைய சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படுவது, நம் அன்றாட வாழ்வில் கடக்கும் விஷயங்களைக் கேலியாக காட்சிப்படுத்தும் யூடியூப் சேனல்கள். ரசிகர்களுக்குப் பிடித்த கான்செப்ட்களில் இறங்கி அடிக்கும் இவை, எப்போதும் டிரெண்ட்டில் இருக்கும். அப்படியான ஒரு யூடியூப் சேனல், 'எரும சாணி'. இவர்களுடைய பல கான்செப்ட்கள் மீம் டெம்பிளேட்களாக ஃபார்வேர்டு ஆகின்றன.

'எரும சாணி' யூடியூப் சேனலில் அனைவரையும் ஈர்த்த ஜோடி, ஹரிஜா - விஜய். சமூக வலைதளங்களில் ஹரிஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் விஜய்யும் சேர்ந்து கலக்கும் எபிசோடுகள், அனைத்துமே செம்ம ஹிட். இந்த 'எரும சாணி' நிகழ்ச்சிக்கு பிரேக் எடுத்திருந்த ஹரிஜா, தற்போது ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தத் தகவலை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அறிந்துகொள்ள ஹரிஜாவிடம் பேசினேன்.

விஜய் - ஹரிஜா

``இதுக்கு முன்னாடி வேற ஒரு புராஜெக்ட்டில் கமிட் ஆகி இருந்ததால், 'எரும சாணி' நிகழ்ச்சிக்கு பிரேக் எடுக்கவேண்டியதாச்சு. இப்போ ரீ-என்ட்ரி கொடுத்துட்டேன். நானும் விஜய்யும் சேம் காம்போவில் கலக்க ரெடியா இருக்கோம். இதுவரை என்னை மிஸ் பண்ணின ரசிகர்களுக்கு, ஒரு ஸாரி சொல்லிட்டு, இனிமே இறங்கிக் கலக்கறேன். வாழ்த்துங்க ரசிகர்களே. 'தீபாவளி ஸ்பெஷல்' மூலமா 'எரும சாணி'க்குள்ளே ரீ-என்ட்ரி ஆகறேன்'' எனப் புன்னகைக்கிறார் ஹரிஜா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க