வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (31/10/2018)

கடைசி தொடர்பு:18:10 (31/10/2018)

நலத்துக்கும் சுவைக்கும் நாட்டுச் செக்கு எண்ணெய்

கொழுப்புச் சத்து, ஆரோக்கியமாக வாழ உடலுக்குத் தேவையான அடிப்படை சத்துக்களில் முக்கியமானது. கொழுப்பு என்றாலே தேவையில்லாத ஒன்று என நினைப்பது பெருந்தவறு, இதில் நல்ல கொழுப்பு - High Density LipoProtein (HDL) மற்றும் கெட்ட கொழுப்பு - Low Density LipoProtein (LDL) என இருவகை உண்டு... உடல் சீராக செயல்பட நல்ல கொழுப்பு ரொம்பவே அவசியம். பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, நட்ஸ், போன்ற உணவுகளில் இருந்து கொழுப்புச் சத்தை நம் உடல் கிரகித்துக்கொள்கிறது. இந்த உணவுப்பொருள்கள் தவிர்த்து நம் இந்திய உணவில் நமக்குத் தேவையான கொழுப்புச் சத்தை தருவன நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்தான். ஆரோக்கியம் மற்றும் உணவுக்குச் சுவை, இரண்டையும் தரவல்ல ஊட்டச்சத்துள்ள எண்ணெய்களைப் பயன்படுத்தியதால்தான், நம் முன்னோர் நோய் நொடி எதுவும் அண்டாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். 

நாம் முன்பெல்லாம் பாரம்பரியமாக செக்கில் ஆட்டப்படும் எண்ணெயைத்தான் பயன்படுத்தி வந்தோம். இவ்வகையான செக்கு எண்ணெயில் விதையில் இருக்கும் உயிர்ச்சத்துகள் அப்படியே இருக்கின்றன என்பது நாம் அறிந்ததுதான்... விதைகளில் உள்ள வைட்டமின்கள் செக்குகளில் பிழிந்து பெறப்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் இருக்கின்றன. மேலும் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகிய சத்துகளும் இதில் அடங்கியுள்ளன. செக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் குறையும். தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். விளக்கெண்ணெய் குடலை சுத்தப்படுத்தும் மற்றும் நல்லெண்ணெய் முதுமையைத் தாமதப்படுத்தக்கூடியது.

தீபாவளி வந்தாச்சு...

தீபாவளிக்கும் எண்ணெய்க்கும் பெரிய உறவுண்டு. எள் நெய் மருவி எண்ணெய் ஆனது, இதுவே பிற விதையில் இருந்து எடுக்கப்படும் நெய்களுக்கும் பொதுப் பெயர் ஆகிப்போனது. எனவே எண்ணெயில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய். தலைக்கு நல்லெண்ணெய்த் தேய்த்து குளித்தபின்தான் தீபாவளித் திருநாளே துவங்குகிறது. அடுத்து வருவது பலகாரம்தான். முறுக்கு, அதிரசம், சுழியம், பணியாரம், சோமாஸ், தேன்குழல் மிக்சர் என தீபாவளியன்று எண்ணெயில் செய்யப்படும் பதார்த்தங்கள் ஏராளம். பாரம்பரிய முறையில் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் இவ்வகையான பலகாரங்களைச் செய்வதே நம் வழக்கமாக இருந்துவந்தது. அப்படிச் செய்யப்பட்ட பதார்த்தங்களின் ருசியும் அலாதியாக இருக்கும். குறிப்பாக செக்கு எண்ணெயில் பலகாரங்களைச் செய்யும்போது இவற்றின் ருசி நாவுக்கு விருந்து படைப்பதாக இருக்கும். இயற்கையான செக்கு எண்ணெயில் கிடைக்கும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தை இந்தப் பலகாரங்களில் இருந்து பெறமுடிகிறது. 

செக்கோ இயற்கை செக்கு எண்ணெய்

செக்கோ நிறுவனம் பாரம்பரிய முறைப்படி வாகை மரச் செக்கு மரத்தில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய்களை வழங்கிவருகிறது. எந்தவொரு செயற்கை விஷயங்களும் இல்லாமல் சூரிய ஒளியில் நேரடியாக வடிகட்டி எடுக்கப்படும் இந்த எண்ணெய் அடர்த்தி அதிகமானதாக, நல்லக் கொழுப்புச் சத்து நிறைந்ததாக இருக்கிறது. சமையலின் சுவை மாறாமல், சுவை கூட்டி உடலுக்கு வலு சேர்க்கும் மரச்செக்கு எண்ணெய் உபயோகித்து இந்த தீபாவளித் திருநாள் மட்டுமின்றி தினசரி சமையலையும் கொண்டாடி மகிழ்வோம்.

மேலும் விவரங்களுக்கு 9176 679 154 / contact@agaramfoods.com

நீங்க எப்படி பீல் பண்றீங்க