Published:Updated:

சென்னை-பெங்களூர் டபுள்டக்கர் ஏ.சி. ரயில் ஏப். 25 முதல் இயக்கம்

சென்னை-பெங்களூர் டபுள்டக்கர் ஏ.சி. ரயில் ஏப். 25 முதல் இயக்கம்
சென்னை-பெங்களூர் டபுள்டக்கர் ஏ.சி. ரயில் ஏப். 25 முதல் இயக்கம்
சென்னை-பெங்களூர் டபுள்டக்கர் ஏ.சி. ரயில் ஏப். 25 முதல் இயக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரல்-பெங்களூர் இடையே டபுள் டக்கர் ஏ.சி சேர்கார் சொகுசு ரயில், வருகிற 25 ஆம் தேதி முதல் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த ரயில் பெட்டிகள் மற்ற ரயிலை விட பல்வேறு வசதிகளை கொண்டது.முழுவதும் குளுகுளு வசதி கொண்ட இந்த ரயிலில் தரை தளமும், மாடிப்பகுதியும் உள்ளது. முற்றிலும் 10 பெட்டிகள் கொண்ட டபுள் டக்கர் ரயில் உட்கார்ந்து பயணம் செய்யக்கூடிய சொகுசு இருக்கைகளாகும்.

பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் சென்ட்ரல்-பெங்களூர் இடையே, கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தன. அதில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகு டபுள்டக்கர் ஏ.சி. ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுமதி அளித்தார்.

##~~##
இதையடுத்து இந்த ரயில் நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு புறப்படும் இந்த ரயில் (எண் 22625) காலை 7.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு பகல் 1.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக அங்கிருந்து (எண் 22626) பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடைகிறது.
பயணக் கட்டணம் ரூ.470 ஆகும்.இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.