காரில் சீட் பெல்ட் அணிய மாட்டீர்களா நீங்கள்... ஒவ்வொரு மூன்றரை நிமிடமும் கவனம் ப்ளீஸ்! | These things can be avoided, if you wear seatbelt in your car!

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:25 (01/11/2018)

காரில் சீட் பெல்ட் அணிய மாட்டீர்களா நீங்கள்... ஒவ்வொரு மூன்றரை நிமிடமும் கவனம் ப்ளீஸ்!

கர்ப்பமாக இருக்கும் பெண்களும், சீட்பெல்ட் அணிவது அவசியம். அவரவர் உடல் பருமனைப் பொறுத்து, சீட் பெல்ட் அணிவதை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

பாதுகாப்பு... எந்தவொரு வாகனத்தையும் புதிதாக வாங்கும்போதோ அல்லது இருக்கும் வாகனத்தைப் பயன்படுத்தும்போதோ, வாகனத்தில் இருக்கும் முன்னே சொன்னதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. எனவே, டூவீலர் என்றால் ஹெல்மெட்டையும், ஃபோர்வீலர் என்றால் சீட் பெல்ட்டையும் அணிவது அவசியம்.

சீட் பெல்ட்

எந்த வாகனத்தை வைத்திருப்பவராக இருந்தாலும், இதை குறைந்தபட்சம் பின்பற்றினாலே, பெரும்பாலான விபத்தைத் தவிர்த்துவிடலாம். Seat Belt அணியாமல் இருப்பதால் நடப்பவை என்ன தெரியுமா? இதை வழக்கமான முறையில் பார்க்காமல், புள்ளிவிவரங்களுடன் பார்ப்போம். 

Seat Belt

* இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆய்வின்படி, கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகளால் மட்டும், ஒவ்வொரு 3.5 நிமிடத்துக்கும் ஒருவர் உயிரிழப்பதாகச் சொல்லப்படுகிறது.

* உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆய்வறிக்கையின்படி, ஒருவர் காரின் முன்பக்க இருக்கையில் பயணிக்கும்போது Seat Belt-யை சரியாக அணிவதால், அவர் விபத்தின்போது காயமடைவதற்கான சாத்தியம் 50 சதவிகிதம் குறைவு. இதுவே பின்பக்க இருக்கை என்றால், அது 75 சதவிகிதம் குறைவு. 

Seat Belt

* ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒருவர் காரில் Seat Belt அணிந்து பயணிக்கும்போது விபத்து நேர்ந்தாலும்கூட, அவர் விபத்தில் உயிரிழப்பதிலிருந்து 61 சதவிகிதம் தப்பித்துவிடுவார் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த நேரத்தில் முன்பக்கத்தில் இருப்பவர் Seat Belt அணியாதிருந்தால், அவர் காரின் டேஷ்போர்டில் இடித்து காயமடையவோ, இறக்கவோ வாய்ப்பிருக்கிறது. பின்பக்க இருக்கை என்றால், அவர் காரிலிருந்து வெளியேகூட விழலாம். 

Seat Belt

* தற்போது விற்பனையாகும் பெரும்பான்மையான கார்களில், இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. ஏர்பேக் இருப்பதால் சீட் பெல்ட் அணியத் தேவையில்லை என எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், சீட் பெல்ட் அமைப்பில் இருக்கும் Pretensioner & Force Limiter ஆகியவை, ஏர்பேக் உடன் கூட்டணி அமைத்தே வேலைசெய்யும்.

Seat Belt

* கார் தயாரிப்பாளர்களிடையே, ISOFIX சீட்கள் மீதான விழிப்புஉணர்வு அதிகரித்துவருகிறது. வழக்கமான முறையில் பின்பக்க சீட்டில் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் போட்டுச் செல்வதைவிட இதில் குழந்தைகளை அமரவைத்துச் சென்றால், விபத்தால் அவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 35 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. இது 4 முதல் 13 வயதுடைய குழந்தைகளுக்குப் பொருந்தும்.

* கர்ப்பமாக இருக்கும் பெண்களும் சீட் பெல்ட் அணிவது அவசியம். அவரவர் உடல் பருமனைப் பொறுத்து, சீட் பெல்ட் அணிவதை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளலாம். அதாவது தோள்பட்டை பக்க சீட்பெல்ட்டை, கழுத்திலிருந்து விலக்கிவிடலாம். இதனால் மார்புப் பகுதிக்கு இடையே சீட் பெல்ட் சரியாகச் சென்றுவிடும். மேலும் மடிப்பக்க சீட் பெல்ட்டை வயிற்றுப் பகுதிக்குக் கீழே வைக்கும்போது, இடுப்பு மற்றும் இடுப்பு எலும்புப் பகுதி கச்சிதமாகப் பார்த்துக்கொள்ளப்படும்.

விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி?

* ஓட்டுநர் மொபைலைப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டும்போது, விபத்து நிகழ்வதற்கு 4 மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதுடன், அதில் அவர் காயமடைந்தும்விடுவார்.

Seat Belt

* காரை ஓட்டுபவர் மொபைலைப் பயன்படுத்தும்போது, சாலையில் அவரின் கவனம் இருக்காது. எனவே, சரியான லேனில் கார் பயணிக்காது என்பதுடன், அவரின் Reaction Time-ம் மெதுவாகவே இருக்கும். தவிர, முன்னே செல்லும் வாகனத்துக்கும் இதற்குமான இடைவெளியும் குறைவாகவே இருக்கும். இதனால் விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. 

Seat Belt

* குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாமல் இருந்தாலே, விபத்தில் உயிரிழப்பதிலிருந்து 20 சதவிகிதம் தப்பித்துவிடலாம். ஒருவேளை, ஒருவர் மீது காரை ஏற்றிவிட்டால்கூட, காரின் வேகம் 50 கிமீ ஆக இருந்தால் அவர் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 20 சதவிகிதத்துக்கும் குறைவுதான். இதுவே 80 கிமீ-க்கும் அதிகமான வேகத்தில் சென்று ஒருவர் மீது மோதினால், அவர் உயிரிழப்பதற்கு 60 சதவிகிதம் வாய்ப்புண்டு.

Seat Belt

* ஒருவர் சாலையைக் கடக்கும்போது மொபைலைப் பார்க்கக் கூடாது. தவிர, இந்த நேரத்தில் சாலையில் போதுமான வெளிச்சம் இருப்பதும் அவசியம். Zebra Crossing-ல் சாலையைக் கடப்பது பாதுகாப்பானது. ஒருவேளை Zebra Crossing இல்லாவிட்டால், நம்மை நோக்கி வரும் வாகனத்திலிருந்து சற்று விலகி சாலையைக் கடப்பது நலம். இல்லையெனில், சிக்னல் விழும் வரை பொறுமையாகக் காத்திருந்து, சாலையைப் பாதுகாப்பாகக் கடந்துவிடலாம்.

* ஒருவேளை விபத்து ஏற்பட்டுவிட்டால், ஒருவர் அந்த அவசர நேரத்தில் தொடர்புகொள்ளவேண்டிய எண்கள்...

காவல்துறை - 100

தீயணைப்புத் துறை - 101

ஆம்புலன்ஸ் - பிற மாநிலங்கள் - 102, தமிழ் நாடு - 108

விபத்து நேரச் சேவை - 103.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்