வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:22 (01/11/2018)

கணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்!

வாழ்க்கையில், பலருக்கும் லட்சியமாக இருப்பது தொழில்  தொடங்கும் எண்ணம். பலருக்கு லட்சியம் இருப்பினும், சிலருக்கே வியாபாரம் செய்து முன்னேறும் அனுகூலம் வாய்க்கிறது. முயற்சி, சரியான அணுகுமுறை, தோல்வியைக் கண்டு துவளாத தன்மை, திட்டமிடல்... இவையெல்லாம் தொழில் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. நாம் தரவிருக்கும் பொருளோ, சேவையோ, மக்களுக்குத் தேவைப்படுபவையா, அதை எவ்வாறு இலகுவாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது என்பதைத் திட்டமிட்டுச் செய்யும் நிறுவனங்கள், தொழில் போட்டியில் விஞ்சி நிற்கின்றன. இறுதியாக மக்கள் மனதில் நிற்பதெல்லாம் தரம். அதுவே, தொழிலைக் காத்து நிற்கும் அரண்.

இவ்வாறு பல நுணுக்கமான சங்கதிகளை அறியாமல் தொழில் துவங்கும் பலர், சறுக்குவதைக் காணமுடிகிறது. தவறுசெய்து தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, முதன்முறை தொழில் தொடங்கும்போதே சரியான வழி சென்று லாபம் பார்க்க முடியுமா? முடியும் எனக் கூறுகிறார்கள் ஃப்ரான்ச்சைசீ முறையில் தொழில் செய்துவரும் தொழில் முனைவோர். புதிதாக தொழில் தொடங்குவதைவிட ஏற்கெனவே புகழ்பெற்ற கம்பெனியின் கிளைக்கு உரிமையாளராகி, விரைவில் நாம் நினைத்த உச்சத்தைத் தொடமுடியும். ஃப்ரான்ச்சைசீ முறையில் பெருநிறுவனங்கள் வியாபாரத்தில் வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, தங்களின் கிளை உரிமையாளர்களுக்கு, அவரவரின் சொந்தத் தொழில் போல, கிட்டத்தட்ட முழு சுதந்திரத்தையும் வழங்குகின்றன.

க்ரீன் டிரெண்ட்ஸ் காட்டும் பாதை...

பெருநகரங்களில், அழகு நிலையங்களுக்குப் படை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் நல்ல வருவாயை ஈட்டிவரும் தொழிலாக இருக்கிறது சலூன் துறை. தங்களுக்கு என தனி வியாபார யுக்தியை அமைத்துக்கொண்டு கோலோச்சிவரும் நிறுவனம்தான் புகழ்பெற்ற கெவின்கேர் நிறுவனத்தின் அங்கமான 'க்ரீன் டிரெண்ட்ஸ்'. க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூன் பிராண்ட் வளர்ச்சியில் ஃப்ரான்ச்சைசீ-க்களின் பங்கு மிக முக்கியமானது. 250-க்கும் மேற்பட்ட ஃப்ரான்ச்சைசீ சலூன்கள் கொண்டுள்ள  க்ரீன் டிரெண்ட்ஸ், வியாபாரத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சலூன் தொடங்குவதில் உள்ள அனைத்து உதவிகளையும் செய்கிறது. தொழில் தொடங்குவோர் வெற்றிகரமாகத் தொழில் நடத்துவதற்குத் தேவையான நுணுக்கங்களையும் நெளிவுசுளிவுகளையும் இவர்களிடமே கற்றுக்கொள்ளலாம். க்ரீன் ட்ரெண்ட்ஸ் ஃப்ரான்ச்சைசீ மூலம் ஒருவர் இந்த பிராண்டின் பங்குதாரராக ஆவதோடு, சலூன் துறை குறித்த ஆழ்ந்த அறிவையும்  பெறமுடிகிறது, இதனால் மேலும் லாபத்தை அடையமுடிகிறது.

பிரான்ச்சைசீ உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

க்ரீன் டிரெண்ட்ஸ் நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் துறையில் பணியாற்றிவந்தபோது, தொழில் முனைவோராக ஆகவேண்டும் என்கிற ஆசை என்னுள் இருந்தது. வேறு ஏதோ தொழில் தொடங்குவதைவிட நம்பிக்கையான க்ரீன் டிரெண்ட்ஸ் ஃப்ரான்ச்சைசீ ஒன்றை வாங்க முடிவெடுத்தேன். சீர்காழியில் 2013-ல் முதல் கிளையை ஆரம்பித்தேன். க்ரீன் டிரெண்ட்ஸின் உறுதுணை, கடுமையான உழைப்பு மற்றும் தரமான சேவை ஆகியவை, வளர்ச்சிக்கு வித்திட்டன.

- விசு, கிரீன் டிரெண்ட்ஸ் பிரான்ச்சைசீ உரிமையாளர், சீர்காழி

எனக்கும், நண்பர் சாய்ராஜுக்கும் Cavinkare நிறுவன உரிமையாளர் C.K. ரங்கநாதன் அவர்களைப் போல மிகப்பெரிய தொழிலதிபராக ஆக ஆசை. எனவே,  2012-ல், எங்களின் முதல் க்ரீன் டிரெண்ட்ஸ் கிளையை ஆரம்பித்தோம். இப்போது 5 வருடங்களில், 4-ஆவது கிளையை நிறுவியுள்ளோம். மேலும், இதை விரிவுபடுத்தவும் நினைக்கிறோம். எங்களுடைய நட்பு வட்டத்திலும் க்ரீன் டிரெண்ட்ஸ் பிரான்ச்சைசீயை பரிந்துரைத்துவருகிறோம்.


- சுரேஷ்,  கிரீன் டிரெண்ட்ஸ் பிரான்ச்சைசீ உரிமையாளர், பம்மல்

கெவின்கேர் -  ட்ரென்ட்ஸ் பிரிவு வழங்கும் 360° ஆதரவு

* ஃப்ரான்ச்சைசீ தொடக்கம் மற்றும் பயிற்சி * இடம் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை * கட்டட வடிவமைப்பு மற்றும் வடிவமைப்பாளர் இறுதிசெய்வதில் உதவி மற்றும் புராஜெக்ட்டில் வழிகாட்டல் • பணியாளர் சேர்ப்பில் வழிகாட்டுதல் • விளம்பரப்படுத்துதலில் வழிகாட்டல் • ஊழியர்களுக்குப் பயிற்சி • சட்டரீதியான வழிகாட்டல் • தொழில் மேம்பாடு • மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் • தர கண்காணிப்பு அமைப்பு • பாயின்ட் ஆஃப் சேல் மென்பொருள் • வணிகத் தகவல் முறைமை • விற்பனையாளர் மேலாண்மை வழிகாட்டல் • தயாரிப்புகள் மற்றும் நுகர்பொருள்கள் வழங்கல்.

மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க