வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:39 (02/11/2018)

நகை வாங்கும்போது ரொம்ப உஷாரா இருக்கணும்!

திருமணம், அட்சய திரிதியை மற்றும் விழாக்காலங்களில் தங்கநகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். தவிர தள்ளுபடி, ஆஃபர் என ஒரு பக்கம் இருந்தாலும் சாதாரண நாட்களிலும் தங்கம் வாங்குவதில் இருந்து மக்கள் பின்வாங்குவதில்லை. தங்கம் வாங்கும்போது, எங்கு? எதை? வாங்குவது என்று தீயாக யோசனை செய்த பிறகே மக்கள் தங்கத்தை வாங்கும் முதல் அடியை எடுத்து வைக்கின்றனர். பலவகை கலெக்ஷன்ஸ், டிசைன்ஸ்,  போன்றவைகளை எதிர்பார்க்கும் மக்கள், 916 ஹால்மார்க்குடன், செய்கூலி, சேதாரம் மற்றும் விலை குறைவான தங்க நகைகளையே வாங்கத் திட்டமிடுகின்றனர். விலையைப் பார்க்கும் நாம் வேறென்ன முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்?...

KDM நகைகள், பயனும் பலவீனமும்...

தூய்மையான தங்கத்தில் ஆபரணங்கள் செய்யமுடியாது என்பதால், தங்கத்தில் சிறிதளவு பிற உலோகம் கலக்கப்படுகிறது. 916 ஹால்மார்க் நகையில் 91.6% சதவீதம் தங்கமும் மீதமிருக்கும் 8.4 சதவீதத்தில் வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் கலந்திருக்கும், 91.6% தங்கமுள்ள ஆபரணங்களே 22 கேரட் ஆபரணங்கள் என அழைக்கப்படுகின்றன. இது தவிர, நகை செய்யும்போது ஆபரணத்தின் இரு பாகங்களை பற்றவைத்து இணைப்பதற்கும் செம்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்யப்பட்ட பழைய 22 கேரட் தங்கத்தை உருக்கி புது நகை செய்யும்போது, மேலும் இணைப்பு உலோகங்கள் பயன்படும், இதனால் ஒவ்வொருமுறை உருக்கி புது நகை செய்யும்போதும் நகையின் தரம் குறைந்துகொண்டே போகும்! இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக கேட்மியம் (Cadmium or KDM) என்ற வெள்ளை நிறத்தினாலான உலோகம் பயன்பட்டது. விலை மலிவான KDM வைத்து நகைகளை இணைத்து பற்றவைக்கும்போது, கேட்மியம் ஆவியாகிவிடும். இதனால் அதில் தங்கத்தை தவிர வேறெந்த உலோகமும் இருக்காது. மேலும் சேதாரமும் அதிகளவில் இருக்காது. 

ஆனால், நகை செய்பவர்கள் கேட்மியம் ஆவியை சுவாசிப்பதால், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. KDM நகைகளை அணிபவர்களும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்பதனால் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS), கேட்மியத்தை தடை செய்தது. எனவே, ஏதாவது நகைக்கடை சேதாரம் குறைவான, தரமான KDM நகைகளை நாங்கள் விற்கிறோம் எனக் கூறினால் யோசிக்காமல் அங்கிருந்து நடையைக் கட்டிவிடுவதே நல்லது!

குறைவான விலையில் சிறந்த நகைகள்!

தற்போது பெரும்பாலும் ஜிங்க் (Zinc) என்னும் உலோகம் சேர்த்து தங்க நகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஷோரூம்களில் விற்கப்படும் கைவினை நகைகளை வாங்குவதில் பொதுமக்களுக்கு எப்போதும் ஒரு பின்னடைவு உண்டு, அதுவே அதிகப்படியான செய்கூலி மற்றும் சேதார விலை!

தற்போது இந்த நிலையை மாற்றி, மக்களுக்கு உற்பத்தி விலையில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்குகிறது 'பிரில்லியன்ட் கட்' நிறுவனம். இந்த நிறுவனம் நகைகளை தாங்களாகவே மெஷின்களை வைத்து உற்பத்தி செய்து வருகிறது. இவர்களின் நகைகள் மெஷின்களால் உருவாக்கப்படுவதால் 36% வரை சேதாரம் குறைக்கப்படுகிறது. இது மற்ற தங்க நகைகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. இதனால் லட்சக்கணக்கில் நகை வாங்குபவர்கள் பல ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

கைவினை நகைகளை காட்டிலும் 50% லேசானதாகவும், வலிமையானதாகும் பிரில்லியன்ட் கட் நகைகள் உள்ளன. தவிர, ரத்தின கற்களை நேர்த்தியாக கையாளுவதால், அதற்கு 41% வரை அவர்களால் சலுகை தர முடிகிறது. பிரில்லியன்ட் கட்டில் மக்கள் விரும்பிய டிசைன்களை ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வரை அந்த நகை பலமுறை திருத்தம் செய்யப்படும். மெஷின்களில் உற்பத்தி செய்யப்பட்டாலும், தங்கம் முழுமையடைவதில் எந்த குறையும் இருக்காது. இதனால் மன திருப்தியுடன் தங்க நகைகளை வாங்கமுடிகிறது. மேலும், பழைய நகைகளை வாங்கும்போது, அன்றைய விலைக்கே பிரில்லியன்ட் கட் பெற்றுக் கொள்வதால், மக்கள் கூடுதலாக சேமிக்கலாம்.

"ஷோரூம்களை விட இங்கு மலிவான விலைகளிலேயே தங்கம் விற்கப்படுகிறது, 35% வரை பிரில்லியன்ட் கட்டில் வாடிக்கையாளர்கள் சேமிக்கலாம். பிற நகைக்கடைகளின் வெப்சைட்டில் இருக்கும் நகையையும், அதைப் போன்று இருக்கும் www.brilliantcut.co.in எனும் எங்களின் தளத்தில் விற்கப்படும் நகையை ஒப்பிட்டு இந்த விலை வித்தியாசத்தை வாடிக்கையாளர்களே கண்கூடாகத் தெரிந்துகொள்ளலாம். பிரில்லியன்ட் கட் நகைகள் அனைத்தும் IGI, GIL, SGL, GSL போன்ற ஆய்வுக்கூடங்களால் பரிசோதிக்கப்பட்டவை. ஒருமுறை உற்பத்தி செய்யும் இடத்திலேயே வந்து விரும்பிய நகையைப் பெற்றுவிட்டால் இன்னொரு முறை ஷோரூம் பக்கமே மக்கள் செல்ல மாட்டார்கள்", என்று அடித்துக் கூறுகிறார் பிரில்லியன்ட் கட் நிறுவனர் ராகுல் சோவாத்தியா. 

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகையும் உண்டு... மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்...

1). Name *

2). Contact *

3). State *

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க