வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (02/11/2018)

கடைசி தொடர்பு:11:19 (05/11/2018)

தீபாவளி டிரஸ் ஷாப்பிங் கிளம்பிட்டீங்களா..? உங்களுக்கான டிப்ஸ்தான் இவை! #Tips

பொதுவாகத் தீபாவளிக்கு நிறைய வகையான புது ஆடைகள் டிரெண்டில் களம் இறங்கும். அவற்றில் நமக்குப் பொருத்தமான ஆடையைத்தேர்வு செய்வதுதான் சவாலே.

தீபாவளி டிரஸ் ஷாப்பிங் கிளம்பிட்டீங்களா..? உங்களுக்கான டிப்ஸ்தான் இவை! #Tips

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் பரபரப்பான ஷாப்பிங்கில் இருக்கிறீர்களா..? என்ன ஆடைகள் வாங்கலாம், என்ன மாதிரியான அவுட் ஃபிட் நமக்குப் பொருத்தமாக இருக்கும், அக்ஸசரிஸ்களை எப்படி மிக்ஸ் மேட்ச் செய்வது, என இந்தத் தீபாவளிக்கு நீங்கள் அழகில் ஜொலிக்கத் தேவையான ஆடைத்தேர்விலிருந்து மேக் அப் வரை உங்கள் உடலுக்குப் பொருத்தமான அவுட் லுக்குக்கு டிப்ஸ் தருகிறார் ஸ்டைலிஸ்ட் கல்பனா.

கல்பனா.

"பொதுவாகத் தீபாவளிக்கு நிறைய வகையான புது ஆடைகள் டிரெண்டில் களம் இறங்கும். அவற்றில் நமக்குப் பொருத்தமான ஆடையைத்தேர்வு செய்வதுதான் சவாலே. புடவையில் புது டிரெண்டான டஸர் சில்க்கில் ஆரம்பித்து, இண்டோ வெஸ்டர்னில் ஷராரா வரை எந்த ஆடையைத் தேர்வு செய்தாலும் அதை உங்களுக்கு ஏற்ற மாதிரி பொருத்திக்கொண்டால் நீங்கள்தான் தேவதை.

புடவை

ட்ரெடிஷனலான பட்டுப்புடவை, டஸர் சில்க், சில்க் காட்டன், டிசைனர் புடவைகள், நெட்டட் புடவைகள்... என நம் பாரம்பர்யமான ஆடைகளிலும் சின்னச் சின்ன புதுமைகளுடன் வடிவமைப்படும் டபுள் கலர் புடவைகள்தான் இந்த வருடத்தின் ஸ்பெஷல். புடவையிலும் ஸ்மார்ட்டாக வலம்வர விரும்பும் பெண்கள் உங்களுடைய ப்ளவுஸ்களில் வெரைட்டி காட்டலாம்.

ஒல்லியான பெண்களுக்கு போட் நெக், எல்போ ஸ்லீவ், ஹை காலர், பொருத்தமான தேர்வாக இருக்கும். உடல் பருமனான பெண்கள் எனில், நெட்டட் ஸ்லீவ், டீப் நெக் போன்றவை சரியான தேர்வு. பட்டுப்புடவைகளுக்கு ப்ளவுஸ் மேட்ச் செய்கிறீர்கள் எனில், ஸ்லீவ்வில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்துகொள்ளலாம். டிசைனர் புடவைகள் எனில், பேட்டர்ன் வேலைப்பாடுகள் செய்யலாம். என்னதான் புடவைக்கு ஏற்ற ப்ளவுஸ்ஸை மிக்ஸ் மேட்ச் செய்வதில் நேரத்தை செலவழித்தாலும், அக்ஸசரிஸ் தேர்வு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களுடைய மொத்த கெட்டப்பின் அழகும் வீணாகிவிடும்.

ஆடைகள்

டிரெடிஷனலான புடவை எனில், நகா செட் அல்லது கிராண்டான டிரெடிஷனல் நகைகளைத் தேர்வு செய்யலாம். காட்டன் புடவைகள் எனில், ஆக்ஸிடைஸ்டு நகைகள் பொருத்தமாக இருக்கும். டிசைனர் புடவை எனில், சிம்பிலான ஜோக்கர் டைப் அணிகலன்கள்  அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

அபையா சூட்ஸ் (abaya suits)

கிராண்டான லுக் வேண்டும் என நினைக்கும் பெண்கள், அபையா சூட்ஸ் ஆடைகளை அணியலாம். பாலி கம்மல் வகைகள், கிராண்டான மோதிரம் அணிந்துகொண்டால் நீட் லுக் கிடைக்கும். அபையா சூட்ஸ் பொருத்தவரை பேஸ்டல் நிறம் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். மேலும், உங்கள் கூந்தலை கர்லிங் செய்துகொண்டால் கூடுதல் அழகில் எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கலாம்.

லெஹெங்கா

டிப்ஸ்

அடர் நிற ஸ்கர்ட்டுடன் கூடிய லெஹெங்கா கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் டிரெண்டில் கலக்குகிறது. கிராண்ட் லுக் விரும்பிகள் எம்ராய்டரி வேலைப்பாடுகளுடன்கூடிய ஸ்கர்ட் அண்ட் துப்பட்டாவைத் தேர்வு செய்யலாம். சிம்பிள் லுக்கை விரும்புபவர்கள், அதிகப்படியான எம்ராய்டரி, ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்டவற்றைத் தவிர்க்கலாம். ஜோக்கர் டைப் அணிகலன்கள், ஸ்டோன் மோதிரம், பெரிய டைப் கம்மல்கள் போன்ற அணிகலன்களை மிக்ஸ் மேட்ச் செய்வதன் மூலம் லெஹெங்காவில் கூடுதல் அழலில் ஜொலிக்கலாம். ஹை ஃபன் அல்லது ஃப்ரீ ஹேர் ஸ்டைல் போன்றவை பொருத்தமான ஹேர் ஸ்டைலாக இருக்கும்.

பாகிஸ்தானி சூட்

இரண்டு பக்கம் ஸ்லிட் கொண்ட லாங் குர்தாவுடன் கூடிய ஆடைகள் உங்களை மெச்சூட் லுக்கில் காட்டும். அதே நேரம் கிராண்ட் லுக்கிலும் இருக்கும். ஆடையின் நிறத்துக்கு ஏற்ற சிம்மிளான நகைகளைத் தேர்வு செய்து அணியலாம். போனிடெயில் அல்லது ஃப்ரீ ஹேர் ஸ்டைல் பொருத்தமான தேர்வாக இருக்கும்.

ட்ரெடிஷனல் சுங்குடி ஆடைகள்

                                   தீபாவளி

பாரம்பர்யமான நம் சுங்குடி அல்லது பட்டுப்புடவையின் கிளாஸிக் டிசனில் தயாரிக்கப்படும் லாங் அனார்கலி ஆடைகள் இந்த வருடத்துக்கான ஹாட் டிடெண்டாகப் பெண்களிடம் வலம் வருகிறது. ட்ரெடிஷனல் லுக் வேண்டும் என்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். உங்களின் நிறத்துக்குப் பொருந்தும் வகையில் இரண்டு கான்ட்ராஸ்ட் வண்ணங்கள் கொண்ட ஆடைகளைத் தேர்வு செய்து, பாலி டைப் கம்மல்கள், சிம்பிலான வளையல்களை அணிந்து ஃப்ரீ ஹேர் அல்லது ஃபிஷ் டெயில் ஹேர் ஸ்டைல் இட்டுக்கொண்டால் நீங்கள்தான் ட்ரெண்டு செட்டர்.


டிரெண்டிங் @ விகடன்