வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (03/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (03/11/2018)

ஆதரவற்றவர்களுக்கு பேனர் வீடு!- அசத்தும் சென்னைப் பெண்

ஆதரவற்றவர்களுக்கு பேனர் வீடு!- அசத்தும் சென்னைப் பெண்

வீடு

வீடுகள் இன்றி தெருவில் வசிக்கும் மக்களின் மழை நேரச் சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இவர்களின் துயரத்தைத் துடைக்க, சென்னையைச் சேர்ந்த சுகன்யா வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளார். பேனர்களால் தற்காலிகமாக அமைத்துக்கொள்ளும் டென்ட் வீடுகளைத் தயார்செய்து தெருவில் வசிப்பவர்களுக்குக் கொடுத்து சமூக சேவை செய்து வருகிறார்.

     வீடு

இதுகுறித்து சுகன்யாவிடம் பேசினேன். ``குழந்தைகளுடன் தெருவோரத்தில் வசிப்பவர்களைக் கடந்துதான் தினமும் என்னுடைய அலுவலகத்துக்குச் செல்வேன். அப்போதெல்லாம் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். என்னால் முடிந்த போர்வை, ஸ்வெட்டர் போன்றவற்றைக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால், மழை பெய்யும்போது, போர்வைகளும் பயன்தருவதில்லை. என்ன செய்யலாம் என யோசித்தேன். அப்போதுதான் பேனர் டென்ட் ஐடியா ஸ்பார்க் ஆனது. எங்களுடைய நிறுவனத்தில் பயன்படுத்திய பேனர்கள், கட்அவுட்கள் அதிகமாக இருக்கும். அதைப் பயன்படுத்தி தெருவில் இருப்பவர்களுக்கு டென்ட் அமைப்பதற்கு முயன்றோம். உறுதியான பைப்களை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கழட்டி மாட்டிக்கொள்ளும் வகையில், ஒருவர் மட்டும் படுத்து உறங்கும் டென்ட் வீடுகளைத் தயார்செய்தோம். அதுபோல நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குக் கொடுத்தோம். இது அந்த மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது, பயன்படாத பேனர்கள் வைத்திருப்போர் நிறைய பேர் இந்தத் திட்டத்தில் கை கொடுக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கு'' என்கிறார் சுகன்யா.