வெளியிடப்பட்ட நேரம்: 22:47 (03/11/2018)

கடைசி தொடர்பு:22:47 (03/11/2018)

குட்டீஸ்களுக்கான அசத்தல் "சூப்பர் ஹீரோ போட்டி"

வீட்டுச் சுவரில் குழந்தைகள் கிறுக்கினால் இனி அவர்களைத் திட்ட வேண்டாம் பெற்றோர்களே, உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்காக ஒரு அமேஸிங் போட்டியை நிப்பான் பெயின்ட் மற்றும் விகடன் இணைந்து வழங்குகின்றன. குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவை அவர்கள் கைப்படவே வரையலாம் அல்லது தங்கள் மனம் கவர்ந்த அந்த சூப்பர் ஹீரோ பற்றி எழுதலாம். எதனால் அந்த சூப்பர் ஹீரோவைப் பிடிக்கும்? ஏன் அந்த சூப்பர் ஹீரோ ரொம்ப ஸ்பெஷல்? அவருக்கு என்னென்ன சூப்பர் பவர்?... எனக் குழந்தைகள் தங்கள் கற்பனைக்கேற்ப அவர்களைப் பற்றி விவரிக்கலாம்.

போட்டியின் நிபந்தனைகள்:

போட்டியாளர் வயது: 5 முதல் 15 வயதுக்குள்ளாக இருக்கவேண்டும்

படைப்புகளை சமர்ப்பிக்க கடைசி நாள்: 15.11.2018 (வியாழன்)

குழந்தைகள் வரையும் சூப்பர் ஹீரோ ஓவியத்தை அழகாக புகைப்படம் எடுத்து 97909 90404 எனும் வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பலாம் (அல்லது) தங்களின் சூப்பர் ஹீரோவைப் பற்றி குழந்தைகள் எழுதிய பதிவு ஒன்றை (500 வார்த்தைகளுக்கு மிகாமல்) இதே வாட்சாப் எண்ணுக்கும் அனுப்பலாம். அல்லது www.vikatan.com/superhero எனும் இணையதளத்துக்குச் சென்று குழந்தைகளின் படைப்புகளை பதிவேற்றலாம்.

போட்டியில் வெல்லும் குழந்தைகளுக்குப் பாராட்டு விழா சென்னையில் நடைபெறும். வெற்றிபெறும் குழந்தைகள் மற்றும் அவர்களுடன் இரண்டு பெரியவர்கள் சென்னை வந்துபோகும் செலவினை நிப்பான் பெயின்ட் ஏற்றுக்கொள்கிறது. வெற்றிபெரும் 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க