உலகில் மிகப்பெரிய உணவகம்! கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்டம் | World's Largest Underwater Restaurant Build at Norway

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (05/11/2018)

கடைசி தொடர்பு:13:50 (05/11/2018)

உலகில் மிகப்பெரிய உணவகம்! கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்டம்

உலகின் மிகப்பெரிய 'அண்டர் வாட்டர் ரெஸ்டாரன்ட்',  நார்வேயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இதன் திறப்புவிழா நடைபெற உள்ளது.

உணவகம்

தினமும் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கும் உலகில், எல்லா தொழில்களிலும் புதுமையைப் புகுத்துவது தவிர்க்க முடியாதது. கடலுக்கு அடியில் உணவகங்கள் அமைக்கப்படுவதும் அப்படியான ஒன்றுதான். இதுபோன்ற புதுமையான இடங்களில் அமைக்கப்படும் உணவகங்களுக்குச் செல்ல விரும்பும் மக்கள் அதிகம். கடலுக்கு அடியில் சென்று பார்ப்பதே ஆச்சர்யமான அனுபவம். அதிலும் இந்த உணவகத்தின் கண்ணாடிச் சுவர்களின் வழியே  மீன்களையும், கடலின் பிற ஜீவராசிகளையும் பார்த்தபடியே மக்கள் உணவு உண்ணும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  36x13 அடி அளவுள்ள பிரமாண்டமான ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 அடி அளவு தடிமனுள்ள அந்தக் கண்ணாடி , கடல் நீர் உள் நுழையாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் உணவகத்தினர்.       80 -லிருந்து 100 பேர் வரை ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உண்ணும் விதமாக இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.