வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (05/11/2018)

கடைசி தொடர்பு:15:03 (05/11/2018)

விண்மீன் கூட்டங்களுக்கு நடுவே சிரித்த முகம்! - நாசா க்ளிக் செய்த புகைப்படம்

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி விண்மீன்களுக்கு நடுவே சிரித்த முகம் போன்ற விண்மீன்களை புகைப்படமெடுத்துள்ளது. 

விண்மீன்கள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. விண்வெளியில் நாசா நிறுவியுள்ள ஹப்பிள் என்ற அதிநவீன தொலைநோக்கி, விண்மீன்கள் கூட்டத்தைப்படமெடுத்துள்ளது. அப்போது அந்தக் கூட்டத்துக்கு நடுவே சிரித்த முகம் போன்ற ஒரு அமைப்பு தெரிந்துள்ளது. இதை ஹப்பிள் தொலைநோக்கி அழகாக கிளிக் செய்து விட்டது. தற்போது அந்தப் புகைப்படத்தை நாசா தங்கள் அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு அதற்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளது. 

நாசா அளித்துள்ள விளக்கத்தில், ``ஹப்பிள் என்ற உலகளாவிய கேமரா 3 உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது. ஹப்பிள் தொலைநோக்கியின் உருப்பெருக்கத்தை அதிகப்படுத்தி விண்மீன்கள் கூட்டங்களின் இருப்பிடம் அமைப்பு ஆகியவற்றைக் கணிக்க முடியும். படத்தில் இரண்டு நட்சத்திரங்களுக்கு நடுவே காணப்படும் வில் போன்ற அமைப்பும் ஒரு நட்சத்திரம்தான். அந்த விண்மீனின் ஒளி புவியை வந்தடையும் முன்பு ஒரு வலிமையான ஈர்ப்பு விசையைக் கடந்து வருவதால்தான் ஒளி சிதறடிக்கப்பட்டு வில் போன்ற வடிவம் பெற்றுள்ளது. இதனால் அதன் வடிவம் சற்று உருப் பெற்று இழுக்கப்பட்ட தோற்றத்துடன் காணப்படுகிறது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தைக் கலக்கி வருகிறது.