Published:Updated:

ஃபேஸ்புக் மூலம் ரூ. 8 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தை விற்பனை!

ஃபேஸ்புக் மூலம் ரூ. 8 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தை விற்பனை!
ஃபேஸ்புக் மூலம் ரூ. 8 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தை விற்பனை!
ஃபேஸ்புக் மூலம் ரூ. 8 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தை விற்பனை!

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த பச்சிளம் ஆண் குழந்தை, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மூலமாக தொழில் அதிபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை, அதன் தாத்தாவால், அங்கு பணியாற்றும் குர்பிரீத் சிங் என்ற பெண் ஊழியர் ஒருவருக்கு ரூ. 45 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளது. குர்பிரீத் சிங், அக்குழந்தை குறித்து ஃபேஸ்புக் மூலமாக டெல்லியில் வசித்து வரும் தொழில் அதிபரான தனது நண்பருக்குத் தெரிவித்துள்ளார். அவர் ரூ.8 லட்சம் கொடுத்து அந்த ஆண் குழந்தையை வாங்கியுள்ளார்.

##~~##
இது எதுவும் தெரியாத குழந்தையின் தாய், குழந்தையை தனது தந்தை கொன்று விட்டதாக, காவல்நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பேஸ்புக் மூலமாக குழந்தை விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.