வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (05/11/2018)

கடைசி தொடர்பு:19:36 (05/11/2018)

சாக்லெட் வேக்ஸிங், கெரோட்டின் சிகிச்சை... தீபாவளியன்று நீங்கள் பளபளப்பாக ஜொலிக்க 10 டிப்ஸ்!

கற்றாழை, சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி, ஒயிட் சாக்லெட் என ஃப்ளேவர்களில் இந்த வேக்ஸ் கிடைக்கிறது. தீபாவளியன்று ஸ்லீவ்லெஸ்,  பேக் ஓப்பன் வைத்து டிரெஸ் செய்பவர்கள் இந்த வேக்ஸைப் பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்கிக் கொள்ளலாம். 

ற்ற நாள்களைவிட விழாக்காலங்களில் கூடுதல் அழகுக்கு மெனக்கெடுவது பெண்களின் வழக்கம். அன்றைக்குச் சொந்தக்காரர்களை சந்திப்பது, நண்பர்களைச் சந்திப்பது என்று குழந்தைகளுடன் வெளியில் செல்ல வேண்டியிருக்கும். சிலர் குடும்பத்துடன் ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடுவார்கள். கட்டாயம் கோயிலுக்குச் செல்வார்கள். அதனால், தீபாவளியன்றும் மறுநாள் நோன்பு எடுக்கும்போதும் நாள் முழுக்க பளிச்சென்று இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்காக, விழாக்கால  மேக்கப் டிப்ஸ் தந்து உதவுகிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த்.

தீபாவளி -  டிப்ஸ்

 

1. சருமம் நன்றாக இருப்பவர்களும், ஃபேஷியல் செய்துகொள்ள நேரமில்லாதவர்களும் ஜஸ்ட் புருவங்களை மட்டுமாவது திருத்திக் கொள்ளுங்கள். முகம் பளிச்சென்று இருக்கும்.

2. `ஹெர்பல் ஃபேஷியல்தான் எனக்குச் செட்டாகும்' என்பவர்கள், கடலைப்பருப்பைக் கொரகொரப்பாக அரைத்து அதைப் பாலில் கலந்து,  முகம், உடம்பு என முழுக்கத் தேய்த்துக் குளியுங்கள். இறந்த செல்கள் எல்லாம் உதிர்ந்து சருமம் வழவழப்பாக இருக்கும். தீபாவளி அன்றைக்கு ஃபிரெஷ்ஷாக ஃபீல் பண்ணுவீர்கள்.

பியூட்டிஷியன் மோனிஷா

3. தீபாவளியன்று, தலைக்குச் சிகைக்காய் தேய்த்துக் குளிப்பதால், முடி திரி திரியாக இருக்கும். அதனால், கட்டாயம் முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துங்கள். 

4. பியூட்டி பார்லர் செல்பவர்கள், புருவங்களைச் சீரமைத்துக்கொள்ளுங்கள்; உதடுகளின் மேல் பூனை முடிகள் இருந்தால் எடுத்துவிடுங்கள். உங்கள் சருமத்துக்கு ஏற்ற ஃபேஷியலை செய்துகொள்ளுங்கள்.  கை, கால்களில் அதிகமாக முடிகள் கொண்டவர்கள், அவற்றை நீக்கி விட்டு, நெயில் பாலிஷ் வைத்துக்கொள்ளுங்கள். இதையெல்லாம் பண்டிகைக்கு முந்தைய நாள் மாலை செய்துகொண்டால், மறுநாள் சருமம் மேக்கப் போடுவதற்கு ஏற்றபடி இருக்கும்.   

5. பார்லரில் தலைமுடிக்கு கெரோட்டின் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். வருடம் முழுக்க விதவிதமான ஷாம்புக்கள், ஹேர் கலரிங் என்று  என்ஜாய் செய்தவர்கள்,  கெரோட்டின் புரத சிகிச்சையை எடுத்துக்கொண்டால்,  கூந்தலுக்கு உயிர் வந்ததுபோல இருக்கும். இந்தச் சிகிச்சை முழுக்க முழுக்க கெமிக்கல் கலக்காதது என்பதால், உங்கள் முடியின் தன்மையை மாற்றாமல் அப்படியே வைக்கும். முடி திரி திரியாகப் பறக்காமல் இருக்கும். தவிர, கூந்தலைப் பாதுகாக்கும் சிகிச்சையில் இதுதான் தற்போதைய ட்ரெண்ட். 

6. லிப்போ சால்யுபிள் வேக்ஸால் (liposoluble wax)  கை, கால்களில் இருக்கிற முடியை நீக்கினால், வெயிலால் கறுத்த சருமம்கூட பொலிவாகும். கற்றாழை, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, வொயிட் சாக்லேட் எனப் பல ஃப்ளேவர்களில் இந்த வேக்ஸ் கிடைக்கிறது. தீபாவளியன்று ஸ்லீவ்லெஸ்,  பேக் ஓப்பன் வைத்து டிரஸ் செய்பவர்கள் இந்த வேக்ஸைப் பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்கிக் கொள்ளலாம். 

7. கை, கால் விரல்களைப் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்தால், சுருக்கங்கள் மறைந்தோ அல்லது குறைந்தோ இளமையாகத் தெரியும். 

8. உங்கள் சருமத்துக்கு ஏற்றமாதிரி ஃபவுண்டேஷன் போட்டுவிட்டு, மேலே மேக்கப் போட்டால், சருமம் ஆங்காங்கே ஒவ்வொரு நிறமாக இல்லாமல் ஒரே நிறமாக இருக்கும். அதனால் போடுகிற மேக்கப்பும் சருமத்துடன் கலந்து இயல்பாகத் தெரியும். 

9. வேலைக்குப் போய்வர வசதியாக முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டவர்கள், பண்டிகையன்று, ஹேர் எக்ஸ்டென்ஷன் (செயற்கை முடி) பயன்படுத்தி, ஜடை போட்டு பூ வைத்துக்கொள்ளுங்கள். அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருக்கும். 

10. கண்களில் காலையில் போட்டால் மாலை வரை கலையாத காஜல், மஸ்காரா, ஐ லைனர் போட்டுக்கொள்ளுங்கள்.  லிப்ஸ்டிக் போடப் பிடித்தவர்கள் டிரஸ்ஸுக்கு மேட்சாக போட்டுக்கொள்ளுங்கள். போட்டுப் பழக்கமில்லாதவர்கள் லிப் லைனர், லிப் கிளாஸ் அப்ளை பண்ணிக்கொள்ளுங்கள். அவ்வப்போது, பவுடர், லிப்ஸ்டிக் இரண்டையும்  டச் செய்துகொண்டீர்கள் என்றால், நாள் முழுக்க அழகாக ஜொலிப்பீர்கள்.  


டிரெண்டிங் @ விகடன்