வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (07/11/2018)

கடைசி தொடர்பு:21:20 (07/11/2018)

தீபாவளி சிறப்புத் தபால்தலை வெளியிட்ட ஐ.நா! #stamp

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை அஞ்சல் அமைப்பு வெளியிட்ட சிறப்புத் தபால்தலைகள் அனைத்தும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மரியாதை நிமித்தமாக, தீபாவளிப் பண்டிகையையொட்டி அமெரிக்க அரசின் சார்பில் அதிபரின் வெள்ளை மாளிகையில், இந்தியப் பிரமுகர்களுடன் தீபாவளி விருந்து நிகழ்ச்சியை முன்னாள் அதிபர் ஒபாமா தொடங்கிவைத்தார். தீபாவளியைச் சிறப்பிக்கும் வகையில்,ஐ.நா. சபை சார்பில் தபால்தலை வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்தியச் சங்கங்களின் பிரதிநிதிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்திவந்தனர்.

தபால்தலை

 அதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை அஞ்சல் அமைப்பு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தபால்தலைகளை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பரிமாறப்படும் கடிதங்களில் பயன்படுத்தும் வகையில், இந்த தபால்தலைகள் உள்ளன. இதன் விலை 1.15 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச தபால்தலைகளுக்கான சராசரி விலையாகும். மொத்தமாக 10 தபால் தலைகளுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பெரிய படம் ஒன்றும் இந்த அட்டையில் உள்ளது. தீபாவளியைக் கொண்டாடும் வகையில் Happy Diwali என்ற வாசகங்களும், தீபங்களின் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதியே இந்த தபால்தலை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டாலும், இவை தற்போதுதான் விற்பனைக்கு வந்துள்ளன. ஆன்லைன் மூலமாகவும் இந்த தபால்தலைகள் கிடைக்கும்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகையில், தீபாவளிப் பண்டிகை உலகின் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், தீமை ஒழிந்து நன்மை வெற்றிபெறுவதைக் குறிக்கும் வகையில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த நாளில், புது ஆண்டு பிறப்பதாக பல சமுதாய மக்கள் நம்புகின்றனர் என்று கூறியுள்ளது.

தபால்தலை

மேலும், தபால்தலை வெளியிட்டதற்காக ஐநா-வுக்கு, ஐநா-வுக்கான இந்தியத் தூதர் சையத் அக்பருதீன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "ஐநா-வில் தீயவற்றுக்கும் நல்லவற்றுக்குமான போராட்டம் தினமும் நிகழ்கிறது. தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, தீமையைப் போராடி நன்மை வெற்றிகொண்ட தேடலை விளக்கும்விதமாக இத்தபால் தலைகள் வெளியிடப்பட்டதற்கு நன்றி” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க