முதலில் பெனெல்லி, இப்போது ஹயோசங்...ஸ்போர்ட் பைக் பிரியர்களுக்கு தொடர் ஏமாற்றம்! | Hyosung is not interested in full faired performance bikes

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (09/11/2018)

கடைசி தொடர்பு:07:42 (09/11/2018)

முதலில் பெனெல்லி, இப்போது ஹயோசங்...ஸ்போர்ட் பைக் பிரியர்களுக்கு தொடர் ஏமாற்றம்!

பல சூப்பர் பைக் நிறுவனங்களின் கூட்டணியோடு இந்தியாவில் ஒரே நாளில் 7 ப்ரீமியம் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்த நிறுவனம் மோட்டோராயல்.  FB Mondial, எம்வி அகுஸ்டா, SWM, மற்றும் நார்ட்டன் எனப் புதிய நிறுவனங்கள் இந்திய பைக் சந்தைக்கு வந்துள்ளன. எல்லாமே இத்தாலிய நிறுவனங்கள்தான். DSK வசம் இருந்த ஹயோசங் நிறுவனமும் இப்போது மோட்டோராயல் நிறுவனத்துடன் வந்துவிட்டது.

ஹயோசங் GT 250R

இந்தியாவில் மட்டும் 7000 யூனிட்டுகளுக்கு அதிகமாக ஹயோசங் பைக்குகள் இருக்கின்றன. எல்லாமே இத்தாலிய நிறுவனமாக இருக்கும் இடத்தில், கொரியா நிறுவனமான ஹயோசங்கின் எதிர்காலம் எப்படி இருக்கும் என  மோட்டோராயல் நிறுவனத்தின் தலைவர் அஜின்க்கியா ஃபிரோடியாவிடம் கேட்டோம். "இந்தியாவில்  V-Twin இன்ஜினோடு களமிறங்கிய முதல் பைக் ஹயோசங்தான். இந்நிறுவனத்தை  Value for money பிராண்டாகத்தான் பார்க்கிறோம்.  GT250 போன்ற ஸ்போர்ட்ஸ் மாடல்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் க்ரூஸர் மாடல்களில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளோம்" என்று கூறினார்.

மோட்டோராயல்

ஏற்கெனவே, பெனல்லி நிறுவனமும் ஸ்போர்ட்ஸ் மாடல்களில் கவனம் செலுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது ஹயோசங் நிறுவனம். யமஹா, கவாஸாகி தவிர மற்ற பைக் நிறுவனங்கள் எல்லாமே விலை குறைவான ஃபுல் ஃபேரிங் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைக் கொண்டுவருவதில் தயக்கம் காட்டுகின்றன. ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களுக்கு ஏமாற்றம்தான்.