பார்ச்சூனர் & எண்டேவருக்குப் போட்டி... வருகிறது மஹிந்திரா Alturas G4 எஸ்யூவி! | Fortuner & Endeavour Beware... Mahindra to Launch Alturas G4 on November 24, 2018!

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (09/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (09/11/2018)

பார்ச்சூனர் & எண்டேவருக்குப் போட்டி... வருகிறது மஹிந்திரா Alturas G4 எஸ்யூவி!

அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் இது வெளிவரும் - XUV 700 எனும் பெயரைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமை மொத்தமாக மாறியிருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் - ஃபோர்டு எண்டேவர் - இசுஸூ MU-X ஆகிய XL சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, வருகின்ற நவம்பர் 24, 2018 அன்று தனது Alturas G4 எஸ்யூவியை (Y400: ரூ.22-24 லட்சம்) அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா. அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் இது வெளிவரும்  - XUV 700 எனும் பெயரைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமை மாறியிருக்கிறது.

 

Alturas G4

 

Alturas G4-ன் புக்கிங் ஏற்கெனவே துவங்கிவிட்ட நிலையில், XUV 500-க்கு மேலே, அதாவது மஹிந்திராவின் விலை உயர்ந்த காராக இந்த எஸ்யூவி பொசிஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது. உலகளவில் விற்பனையாகும் ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்தான் இது என்றாலும், க்ரோம் கிரில் மற்றும் பாடி பேனல்களில் சில வித்தியாசங்கள் தெரிகின்றன. 

 

Alturas

 விலை குறைவான G2 & விலை அதிகமான G4 எனும் இரு வேரியன்ட்களில் வரப்போகும் Alturas, 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்கும். இதில் 181bhp பவர் மற்றும் 45kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் கிடையாது என்றாலும், மெர்சிடீஸ் பென்ஸிடமிருந்து AT பெறப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலைப் போலவே, இதுவும் Ladder Frame அமைப்பையே கொண்டுள்ளது. 244மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 5.5 மீட்டர் டர்னிங் ரேடியஸ் இதை உறுதிப்படுத்துகின்றன. ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக்கொண்ட S201 காம்பேக்ட் எஸ்யூவி, சில காலம் கழித்து வரும்.

 

Alturas

விலை அதிகமான மாடலில் எதிர்பார்த்தபடியே 9.2 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், சன்ரூஃப், Quilted Nappa லெதர் அப்ஹோல்சரி, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், வென்டிலேஷன் & சீட் மெமரி உடனான இருக்கைகள், டயமண்ட் கட் அலாய் வீல்கள், ஸ்மார்ட் டெயில் கேட், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 360 டிகிரி கேமரா என அதிக வசதிகளை எதிர்பார்க்கலாம். தனது வழக்கப்படி 'O' என முடியும் பெயரைக் கொண்டிருக்காமல், Alturas G4 எனும் நாமகரணத்தைச் சூட்டியுள்ளது மஹிந்திரா. இதற்கு உயரம் என அர்த்தம். போட்டி கார்களைவிட இதன் விலையைக் குறைவாக நிர்ணயித்து, எஸ்யூவி செக்மென்ட்டில் புதிய உயரத்தை எட்ட இந்நிறுவனம் முயற்சிக்கும். அதற்கேற்ப தனது டீலர்களில் பிரிமியம் Prime Zone-களை நிறுவியிருக்கிறது மஹிந்திரா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க