Published:Updated:

சென்னை - பெங்களூர் இரட்டை மாடி ரயில் சேவை தொடங்கியது!

சென்னை - பெங்களூர் இரட்டை மாடி ரயில் சேவை தொடங்கியது!
சென்னை - பெங்களூர் இரட்டை மாடி ரயில் சேவை தொடங்கியது!

சென்னை: சென்னை - பெங்களூர் இடையேயான குளிர்சாதன வசதி கொண்ட இரட்டை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. குளுகுளு ரயில் மக்கள் தங்கள் பயணத்தை மகிழ்ச்சியுடன் களித்தனர்.
 

சென்னை - பெங்களூர் இரட்டை மாடி ரயில் சேவை தொடங்கியது!

கடந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னை சென்ட்ரல்- பெங்களூர் இடையே குளிர்சாதன வசதிகள் கொண்ட இரட்டை மாடி ரயில் சேவை இன்று  தொடங்கியது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.25 மணிக்கு இரட்டை மாடி ரயில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. நண்பகல் 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைகிறது.

சிறப்பு வசதிகள் கொண்டு ரயிலில் 2 அடுக்கு பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்யலாம். மாடி பகுதியில் உள்ள இருக்கைகளில் ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாதாரணமாக குளர்சாதன சேர்களில் 72 பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம். ஆனால் ரயிலில் 120 பேர் ஒரு பெட்டியில் பயணம் செய்ய வசதி உள்ளது.

##~~##
இருக்கைகள் சாய்ந்தவாறு சொகுசாக அமைக்கப்பட்டுள்ளன. 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள ரயிலில் 1200 பேர் பயணம் செய்யலாம். முதல் நாளான இன்று முன்பதிவு செய்த 5000 பேர் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
இந்த இரட்டை மாடி ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், கண் டோன்ட்மென்ட், பெங்களூர் நகரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.